ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23

09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல் மற்றும் கல்வெட்டு திறப்பும், அன்னதானம் அளித்தல் போன்ற நற்பணிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் திரு செந்தில் ஆறுமுகம், திரு கவிஞர் சிநேகன், திரு நாகராஜன், திரு முரளி அப்பாஸ் மற்றும் மாவட்ட திரு பாசில், மற்றும் மய்யம் பிரமுகர் திரு பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.