கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23

2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில செயலாளர்கள் திரு.சிவ இளங்கோ, Dr.G.மயில்சாமி, திருமதி. Dr. அனுஷா ரவி, திருமதி. மூகாம்பிகா ரத்தினம், மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன், மாநில இணைச் செயலாளர் திரு. ஜெய் கணேஷ் மாநில துணைச் செயலாளர் திரு. P.S ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்வில் மண்டல அமைப்பாளர்கள், திரு.ஶ்ரீதர், திருமதி. ரம்யா வேணுகோபால் திரு.S.P.செல்வத்தங்கம், திரு.சித்திக், மாவட்ட செயலாளர்கள் திரு.சிவா, திரு.பிரபு மற்றும் மாவட்ட கட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.