சென்னை : பிப்ரவரி 13, 2024

பதிவு புதுப்பிக்கப்பட்டது : 23/02/2024

பிரபல அரசியல்வாதியும், மனித நேயம் எனும் ஐ எஎஸ் கல்வி பயிற்சி அகடமி எனும் தொண்டு அமைப்பின் நிறுவனத் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார் ஐந்து ஆண்டுகள் சைதாபேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் 2006 முதல் 2011 வரை சென்னை மாநகரின் மேயராகவும் பதவி வகித்துள்ளார்.

அவரது மகன் வெற்றி துரைசாமி (46) திரைப்பட இயக்குனர் மற்றும் இயற்கையை படமெடுக்கும் புகைப்பட நிபுணர் ஆவார். தனது பணி நிமித்தமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் எனும் நதியில் விழுந்ததாக காவல்துறையினரின் ஆய்வுகள்படி தெரிய வந்தது. விபத்திற்குள்ளான காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமி காணாமல் போனதால் அவரைத் தேடும் பணி அப்பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டது தொடர்ந்து எட்டு நாட்களாக நடைபெற்றதையடுத்து இறுதியாக நேற்று (12.02.2024) சட்லஜ் நதியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் உடலை கண்டெடுத்தார்கள். அதன்பிறகு உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதும் தனி விமானத்தில் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது அகால மரணத்தை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் மிகுந்த துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனையறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது. வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம். மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும்.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

திரு.வெற்றி துரைசாமி (இணைய கோப்புப் படம்)