மே 16, 2௦23

போதைக்கு அடிமையான மனமும் உடலும் மீண்டும் மீண்டும் அதைத் தேடியே செல்லும். என்ன எதுவென்று உணராமல் கிடைத்ததை பருகி பின் அதனால் உயிரிழப்புகள் என சர்வசாதரணமாக நடந்த காலங்கள் உண்டு. அங்கொன்று இங்கொன்றுமாக முளைந்திருந்த கள்ளச்சாராயம் ஆண்டாண்டு காலமாக காவல்துறையின் கண்களில் மிளகாய் தூவிவிட்டு உள்ளூர்களில் கனஜோராய் வியாபாரம் களைகட்டும் போல என்பது சமீபத்தில் சுமார் 1௦ க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் மனதை அதிர வைக்கிறது. இறந்தவர்களுக்கு மனைவி பிள்ளைகள் இன்றைக்கு எந்த ஆதரவும் இன்றி தெருவில் விடப்பட்ட சூழலை உண்டாக்கியுள்ளது. அதனை அருந்தி அகாலமாய் உயிரிழந்துள்ளது வேதனையை தோற்றுவிக்கிறது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. இதுபோன்ற  கோரசம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம்.  இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை,   கள்ளச்சாராயம்  தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபோவோர் உள்ளிட்ட அனைவர்மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும் கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.மக்கள் நீதி மய்யம்

https://m.dinamalar.com/detail.php?id=3322223