மே 23, 2௦23

இந்தியா டுடே பத்திரிகை பத்திரிக்கை கடந்த 2௦17 ஆம் ஆண்டு முதல் சௌத் கான்க்ளேவ் எனும் பெயரில் தனியார் அரங்குகளில் இந்தியாவின் மிகப் பெரிய ஆளுமைகளான பிரதான கட்சிகளின் அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சிகர்கள் என பலதரப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு விவாதங்கள், கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் தமது கருத்துக்கள், தமது பார்வைகள் என வெகு சுவாரசியமாக நடக்கும்.

2௦23 ஆம் சௌத் கான்க்ளேவ் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை அருகில் அமைந்துள்ள தி லீலா ரவிஸ் எனும் இடத்தில் வரும் ஜூன் மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவின் மிகப்பெரிய திரைக்கலைஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இதில் பார்வையாளராக பங்குகொள்ள வேண்டுமெனில் கட்டணத்துடன் கூடிய முன்பதிவு அதற்கான இணையதளத்தில் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Register now India Today South Conclave 2023 for Upcoming Event (intoday.in)

முக்கிய குறிப்பு : இந்தியா டுடே எனும் பத்திரிகை நிறுவனம் நடத்தும் தனியார் நிகழ்வு இதில் கலந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்கள் அந்நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே பங்குகொள்ளலாம். குறிப்பாக இது மக்கள் நீதி மய்யம் சார்பாக நடைபெறும் நிகழ்வு அல்ல.