மே 25, 2௦23

மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரும் இந்தியாவின் மிகச்சிறந்த ஒப்பற்ற தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் ஓர் அற்புத கலைஞராக திகழும் திரு கமல்ஹாசன் அவர்கள் பல புதிய தொழில்நுட்பங்களையும், வித்தியாசமான படைப்புகளையும் வழங்கியிருக்கிறார். மிகச் சிறிய வயதிலேயே திரைத்துறைக்கு நடிக்க வந்தவர் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்தகட்ட நுட்பங்களை கற்றுணர்ந்து தன்னை அதில் ஈடுபடுத்தி சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருவதால் சர்வதேச அளவில் அறியப்படும் மிகச்சிறந்த படைப்பாளியாக விளங்கி வருகிறார். எனவே திரையுலகிற்கு அவருடைய பங்களிப்பை கண்டுகொண்டு மத்திய மாநில அரசுகள் முதற்கொண்டு தனியார் அமைப்புகள் பலவும் பல ஆண்டுகளாக உயரிய விருதுகள் அளித்துவருகிறது.

அவ்வகையில்…..

27 மே 2023, சனிக்கிழமையன்று அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் 23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ‘இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கப்படும் என IIFA ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம்

the IIFA advisory board members along with the IIFA management, have made a unanimous decision to present Mr. Kamal Haasan with the 2023 IIFA Outstanding Achievement in Indian Cinema’ at the 23rd IIFA Awards on Saturday 27th May 2023 at Etihad Arena, Yas Island – Abu Dhabi. – Makkal Needhi Maiam