சென்னை மே 27, 2௦23

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு அபுதாபியில் வழங்கப்படும் “வாழ்நாள் சாதனையாளர் விருதை” கொண்டாடும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்களின் தலைமையில், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. குருசாமி, மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ் ஆகியோரின் முன்னிலையில், திரு கதிர் அவர்களின் ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் திரு.ஓம் பிரகாஷ், திரு.மாறன், திரு. கோமகன், மாவட்ட துணைச் செயலாளர் திரு.சண்முகசுந்தரம், பகுதி செயலாளர்கள் திரு. பாலமுருகன், திரு. அருண் சுரேஷ், திருமதி. ஸ்ரீதேவி மற்றும் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். – மக்கள் நீதி மய்யம்