ஜூலை 15, 2௦23

நமது தமிழ்நாட்டின் பொற்காலம் என பெருந்தலைவர் திரு கே.காமராஜர் ஆட்சி செய்த காலங்கள் என்பர் அரசியல் மக்களும் அரசியல் விமர்சகர்களும் என பலரும் பெருமிதத்துடன் சொல்வர். பாரதப் பிரதமர் நேருவின் மறைவிற்கு பிறகான தேசிய அரசியலில் காமராஜர் அவர்களின் பங்கு இந்திய பிரதமரை தேர்வுசெய்யும் கிங் மேக்கராக திகழ்ந்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்பது அவர் ஆட்சியின்போது துவக்கப்பட்ட பள்ளிகள் பறைசாற்றும். அது மட்டுமல்லாது பள்ளிக்கு வரும் குழந்தைகள் வயிற்றுப் பசியுடன் வரக்கூடும் என்பதையும் கருத்தில்கொண்டு மதிய வேளையில் உணவளித்தார் இந்த திட்டம் எதற்காக எனில் பல வீடுகளில் அவர்களது பொருளாதார நிலைமை பலவீனமாக இருக்கையில் குழந்தைகளை சிறுவயதிலேயே பணிக்கு அனுப்பிவிடுவார்களோ என அச்சப்பட்டு அக்குழந்தைகள் மதிய உணவு திட்டத்தை தமிழகம் முழுக்க செயல்படுத்தினார் மேலும் குழந்தைகளிடையே ஏற்ற தாழ்வுகள் எதுவும் இருக்கக் கூடாது அனைவரும் சமம் என்பதாக சீருடையும் வழங்கச் செய்தார். இன்னும் இன்னும் பெருந்தலைவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம் அவ்வளவு அளப்பரிய சாதனைகளை செய்து முடித்துள்ளார் என்றால் மிகையாகாது. அத்தகைய தலைவரை பல நேரங்களில் அருகிருந்து பார்க்கும் பேசும் வாய்ப்பு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களுக்கு அவரது இளம்வயதில் கிடைத்தது. அதற்கு பெரும் காரணம் தலைவரின் தந்தையும் சுதந்திர போராட்ட தியாகியுமான மூத்த வழக்கறிஞர் திரு சீனிவாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மிகுந்த ஆர்வமும் காந்தியடிகள் மற்றும் பல மூத்த தலைவர்களுடன் அரசியல் ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருந்ததால் அவரது வீட்டிற்கு பல முக்கிய தலைவர்கள் வந்து செல்வார்கள் அந்த வகையில் அவர்களிடம் பரிச்சயம் உண்டு என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமில்லாமல் காமராஜர் அவர்கள் பள்ளிக்கூட கல்வியை கற்றிருக்காத போதிலும் கல்விக்கு முதல் முக்கியத்துவம் அளித்தது குறித்து பெருமிதத்துடன் அவரது பிறந்த நாளில் திரு காமராஜர் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் புகழாரம் சூட்டியுள்ளார்.

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும். – திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்