ஜூலை 15, 2௦23

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த பெருந்தலைவர் திரு கே காமராஜ் அவர்களுக்கு அவரின் பெருமையை போற்றத்தக்க வகையில் ஆலங்குளத்தில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டு திறக்கப்படுவதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து பெருமிதமும் அன்பும் பொங்க வாழ்த்து மடல் ஒன்றை வரைந்து மக்களிடையே சமர்பித்திருக்கிறார் குறிப்பாக சிலை நிறுவப்படும் அதே இடத்தில் சுமார் 5௦ காலத்திற்கு முன்னதான மண் சிலை முன்பாக தேர்தல் பரப்புரை செய்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளவர் கூடவே தனது தந்தையும் கர்மவீரர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் என்பதையும் நளின நடையில் குறிப்பிட்டு உள்ளார்.

வெள்ளித்திரையில் நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய திரு கமல்ஹாசன் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதனைத் தாண்டி கல்வி, கலாசாரம், புத்தகங்கள், பெரியோர்கள் அறிஞர்கள் என பலரையும் படித்து அறிந்தும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவர்களுடன் உரையாடி தன்னை மேம்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதற்கு பெருந்தலைவரை சிலாகித்து பேசி இருப்பதிலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்று நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், இந்த மண்ணுக்காக உழைத்த கர்மவீரர் காமராஜரின் மண் சிலையை மாற்றி காலங்கடந்து நிற்கும் வெண்கல சிலையாக நிறுவப்படும் நிகழ்வுக்கு தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி. – மக்கள் நீதி மய்யம்

#Kamarajar #KamalHaasan #MakkalNeedhiMaiam