அமெரிக்கா : பிப்ரவரி 03, 2024

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற ஆட்சிகளில் சென்னை மாகாணம் என நமது மாநிலத்திற்கு பெயர் வழங்கப்பட்டு வந்ததை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது முதலமைச்சராக பதவியேற்று தமது தலைமையில் ஆட்சியேற்ற பின்னர் உடனடியாக “தமிழ்நாடு” என அழகிய பெயர்சூட்டி அரசின் ஆணை மூலம் பதிவு செய்தார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் நாடகம், திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார் என்பது அவரது எழுதுகோலில் இருந்து புறப்பட்ட புகழ்பெற்ற வசனங்கள், கதைகள், கட்டுரைகள், தனது கட்சியில் உள்ள தம்பிகளுக்கு அண்ணன் எழுதும் கடிதம் என இன்றும் அவர் புகழை பறைசாற்றி வருகிறது என்றால் மிகையாகாது. எளிமையான தலைவராக பகுத்தறிவு கற்றுக் கொண்ட ஓர் பேரறிஞராக தன்னை நிறுவிக்கொண்ட திரு. அண்ணா துரை அவர்கள் எந்த பகட்டும் படாடோபமும் இல்லாத வெகு எளிமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஓர் ஒப்பற்ற தலைவராக வாழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக குறுகிய ஆண்டுகளே ஆட்சி செய்தாலும் எவரும் மறந்து விடாதபடிக்கு ஆட்சி புரிந்து மறைந்தார்.

பிரபல வழக்கறிஞராக செயல்பட்டு வந்த தந்தை திரு.ஸ்ரீநிவாசன் அவர்களின் மூலமாக அறிஞர் அண்ணாவின் புகழை அறிந்து கொண்ட நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு.C.Nஅண்ணா துரை அவர்களின் பிறந்த நாளான இன்று அழகிய வாழ்த்துச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு. அரசியல், இலக்கியம், சினிமா என, தான் தொட்ட அனைத்திலும் சிகரம் தொட்ட வல்லாளர். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் மாண்பிற்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர். பேரறிஞரின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்