சென்னை : மே 20, 2023

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு.

கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று நாட்களுக்கு முன்பு நேரில் சந்திக்கும் வாய்ப்பு.

சிறு தயக்கமும் எப்படி நம்மை அணுகுவார்கள் என்ற கேள்வியும் கொஞ்சம் அலைக்கழித்தது.

எவ்வித பாவனையும் இன்றி நம்மை அரவணைத்துக் கொண்டார். இயற்கை சூழலியல் சிற்றுயிர்கள் என அவரது விரிந்த பார்வை ஆச்சியப்படுத்தியது. அவரது வார்த்தைகளில் மானசீகமான அக்கறையை பொறுப்பை உணர்ந்தோம்‌.

ஒரு சூழலியல் அறிஞருக்கு எத்தகைய மனம் வாய்த்திருக்குமோ அது அவரிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர் திரைக்கலைஞர் மட்டும் அல்ல. மிகச் சிறந்த ஆசிரியர். நல்மனிதர்.

எதேனும் நெருக்கடி என்றால் தயங்காமல் எப்போது வேண்டுமானாலும் சொல் மஞ்சரி. எப்போதும் உன்னுடன் இருப்போம் என்று தோளை தட்டி சொன்னபோது உடைந்து விட்டேன். ஒரு தந்தையின் சொல் அன்றி வேறு என்ன?

தண்ணீர் தீண்டாமை குறித்தும் இதுவரை நாம் செய்த கிணறுகள் குறித்தும் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது, எக்காரணம் கொண்டும் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும். வெற்றி தோல்வி என்று ஒன்றுமில்லை. செயல்படுதல் ஒரு வாழ்வுக்கான கொண்டாட்டம். அதனை செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றபடி ஒரு கிணற்றின் புனரமைப்புக்கான முழு தொகையினை கொடையளித்தார்.

எங்கோ இருந்து நாம் எங்கோ செய்யும் செயலின் மீது அவரது நம்பிக்கை அந்த கிணற்றின் சுனை ஊற்று தான். சந்திப்பு முடிந்தவுடன் மனம் முழுவதும் அவரை நினைத்துக்கொண்டு. கிருஷ்ணம்மாள் பாட்டியின் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற பிரார்த்தனை குரலை நினைந்து வேண்டிக்கொண்டேன்.

இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இன்னும் அந்த செயலில் உண்மையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தருணத்தை உருவாக்கித் தந்த செல்வேந்திரன் அண்ணா, மகேந்திரன் சார், அருணாச்சலம் அய்யா, டிஸ்னி அண்ணன் எல்லோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை

எல்லாம் செயல் கூடும்

– மதுமஞ்சரி செல்வராஜ் (Architect – கட்டிட கலை வடிவமைப்பாளர்)

யார் இவர் :

திண்டுக்கல் சொந்த ஊர் அப்பா செல்வராஜ், ஜவுளிக்கடை உரிமையாளர், இரண்டு மூன்று தலைமுறையாக ஜவுளிக்கடை வியாபாரம், அம்மா விவசாயக்குடும்பத்தை சார்ந்தவர் பின்னர் அவரும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு தந்தையுடன் பணி. அதே ஊரில் புதிதாக துவக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளியில் துவங்கிய படிப்பு பின்னர் அதுவே வளர்ந்து வந்தது. ஜவுளிக்கடை நிர்வாகம் செய்துகொண்டு இருந்தாலும் அப்பா எங்கள் வீட்டை அவரே வடிவமைத்து தந்தார் அதன்படி கட்டிடம் கட்டப்பட்டது. இதே போல் உறவினருக்கும் வீட்டினை வடிவமைத்து தரவே அதன் நுணுக்கங்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது மேற்கொண்டு இதைப் படி என்று சொல்லாமலே அப்பாவின் ஜவுளியில் உள்ள வண்ணங்கள் படங்களை வரையத் தூண்டியது மேலும் அப்பாவின் கட்டிட வடிவமைப்பு அதற்கான படிப்பில் என்னை கற்றுக் கொள்ளச் செய்தது ஆர்கிடெக்ட் ஆனேன் என ஓர் பேட்டியில் சொல்லி இருக்கிறார் மதுமஞ்சரி.

கட்டிடக்கலை பட்டப்படிப்பு முடிந்ததும் இதில் சிறந்து விளங்கிய பல நிபுணர்களை கண்டு வியந்ததும் வேறு மாநிலங்களில் உள்ள பல பிரபலமான நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் கிடைத்தது.

மேலும் தொடர்ந்தார், அதற்கு பின்னர் வெகு சராசரியான ஓர் பெண்ணாக சென்னையில் வசிக்கும் போதினில் வாரக்கடைசியில் ஷாப்பிங் மால்கள் செல்வதும் வாங்கிய பொருட்களையே மரியாதை நிமித்தமா மறுபடி வாங்கி வைத்துக் கொள்வதே நமது மரியாதையை நிர்ணயம் செய்து கொள்ளும்படியாக இந்தச் சமூகம் வடிவமைத்து வைத்துள்ளதாக எனக்குத் தோன்றியது.

இப்படியாகத் சென்ற வாழ்க்கை சிவராஜ் அண்ணன் என்பவர் மூலமாக கங்கை மாசுபடுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த நிகமானந்தா என்பவர் பற்றிய தகவல்கள் கிடைக்கபெற்றதாக குறிப்பிடும் மதுமஞ்சரி அது குறித்து மேலும் தகவல்களை கேட்டுத் திரட்டிக்கொண்டு அவற்றை தொடர்ந்து மனதில் நினைத்துக்கொண்டு இருந்த போது தண்ணீருக்காக ஒரு மனிதர் போராட்டம் செய்து தன்னுயிரை இழந்து நிற்பது மனதிற்கு என்னவோ செய்ததாக சொல்லும் மது இதே போன்று வீணாக கிடக்கும் நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பாக யோசிக்கத் துவங்கி அதனை செயல்வடிவமானதே “ஊர்க்கிணறு புனரமைப்பு”

அதன்பிறகு ஒவ்வொரு ஊரிலும் வெகுவாக பாழடைந்த கிணறுகள் எதுவென்று தேடிக் கண்டுபிடித்து அதனை புனரமைக்க அந்த ஊர்மக்களிடம் சில நேரங்களில் பெரும் மன்றாடல்ககளுக்கு பின்னரே அனுமதி கிடைக்க மிகவும் கடினமாக இருந்தது அவற்றை தோண்டி தோண்டி பல அடிகள் கீழாக செல்லச் செல்ல துளித்துளியாய் நீர் ஊற்று தென்பட்டதும் அந்த ஊர் மக்களின் ஆராவாரம் பெரும் சந்தோஷத்தை தந்தது. இது போல் சுமார் 1௦ கிணறுகள் வரை புனரமைப்பதில் மிகுந்த திருப்தி கிடைத்தது. ஒரு மனிதனின் அத்தியாவசிய உயிர்த் தேவையான நீரினை மீண்டும் கிடைக்கச் செய்த ஊர்க்கிணறு புனரமைப்பு தொடர்பாக அவற்றுக்கான பணிகளை பற்றி கேள்விப்பட்ட திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் மது மஞ்சரி செல்வராஜ் அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து அவரது கிணறுகள் புணரமைப்பின் மீதான ஆர்வம் குறித்தும் அந்த ஆர்வம் இன்றைக்கு பல கிணறுகளை புனரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு திருப்பித் தந்துள்ளது அதற்கான பணிகளை விடாது செய்ய வேண்டும் மனமுவந்து பாராட்டியும் நன்றி நவின்றதும் இல்லாமல் அதற்கென என்னால் இயன்ற பொருளுதவியாக ஓர் முழு கிணறை புனரமைக்கத் தேவையான தொகையை நன்கொடையாக தந்தது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இயற்கையின் மீதும் இந்த மண் சுற்றுசூழல் மனிதர்களுக்கு எவ்வவாறு நன்மைகள் தருகிறது என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் என நாம் நிச்சயம் உணரலாம்.

ஊர்க்கிணறு புனரமைப்பு செய்யும் செல்வி மது மஞ்சரி செல்வராஜ் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் மய்யத்தமிழர்கள்.com தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

பின் குறிப்பு : மதுமஞ்சரி செல்வராஜ் அவர்களைப் பற்றிய தகவல்கள் இணையதளங்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றது, நன்றி