சென்னை : ஜூன் 26, 2௦23
புதுப்பிக்கப்பட்டது : ஜூலை ௦7, 2௦23
கோவையை சேர்ந்த முதல் பெண் பேருந்து ஓட்டுனரான செல்வி ஷர்மிளா என்பவர் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க பிரபலமடைந்தார். பல பெண்கள் பைலட், மருத்துவர், இராணுவம் பொறியாளர் என்பதாக பணி புரிய வேண்டும் என ஆசை கொள்வார்கள்.
இதில் இருந்து சற்றே மாறுபட்ட எண்ணம் கொண்ட பெண்ணாக ஷர்மிளா தான் பேருந்து ஓட்டுனராக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து முறையாக பேருந்து ஓட்டுவதை கற்றுக் கொண்டு அதற்கான உரிமம் பெற்று தனியார் நிறுவன பேருந்தை இயக்கத் துவங்கினார். பெரும் சவாலான இப்பணியை மேற்கொண்டதில் சுற்றுவட்டார மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக மாறினார்.
இந்த ஆசை எப்படி உங்களுக்கு ஏற்பட்டது என்ற கேள்விக்கு அனாயசமான புன்னைகையுடன் கூடிய பதில்களை தந்து சென்றார். அவரது தந்தையும் பேருந்து ஓட்டுனர் ஆக தானும் பேருந்து ஓட்டுனர் ஆக வேண்டும் என்ற ஆவல் உண்டானது எனவும் மேலும் எனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவிக்க அவரும் ஒப்புக்கொண்டார். இதனிடையே தந்தை பணிபுரியும் பேருந்து நிறுவனத்தில் அதன் உரிமையாளர் செல்வி ஷர்மிளாவிற்கு மக்கள் செல்லும் வழித்தடத்தில் ஓர் பேருந்தை இயக்கும் ஓட்டுனர் பணியை வழங்கினார். நாளடைவில் சிறுவர், பெண்கள், ஆண்கள் பலரும் கூட ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினர். ஷர்மிளாவின் ஓட்டுனர் பணியை ஸ்லாகித்து பேசிய பொதுமக்கள் பலரும் பேராதரவு தெரிவித்தனர். இதனை கண்ட சமூக வலைதள ஆர்வலர்கள் யூ டியூப் சேனல்கள் முதற்கொண்டு ஷர்மிளாவின் ஓட்டுனர் பணியை படமாக்கியதோடு இல்லாமல் பிரபலமான பல செய்தி நிறுவனங்களில் ஷர்மிளாவின் பேட்டிகள் ஒளிபரப்பானது.
வெகு விரைவில் சமூக வலைதளங்களில் பிரபலமான பெண்ணாக காணொளிகள் வாயிலாக அனைவரது செல்போனிலும் ஒளிரத் துவங்கி வைரலாகிப் போனார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை சென்றிருந்த திமுக மகளிரணி தலைவியும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்கள் செல்வி ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணம் செய்தார், இந்த நிகழ்வும் திடீரென வைரலானது. அப்போதைய ட்ரிப் முடிந்ததும் என்ன காரணம் என முழுமையாக அறியும் முன்னரே ஷர்மிளாவை ஓட்டுனர் பணியிலிருந்து விடுவிப்பதாகவும் இனி எனது நிறுவன பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தவர் தான் நீக்கப்பட என்ன காரணம் என கேட்டறிந்த போது பேருந்திணை இயக்குவதை பெருமிதமாக கருதியும் அதனால் சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரங்களை மேற்கொள்வதாக அதனால் தன்னை பிரபலமான பெண்ணாக தன்னை காட்டிக்கொள்ள நினைப்பதாகவும் பேருந்து நிறுவன உரிமையாளர் கேள்வி எழுப்புவதாக தகவல்கள் வெளியானது இதனை அறிந்த ஷர்மிளா தான் எதற்காக பிரபலமடைய இப்படி ஒரு குறுக்கு வழியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பிரபலமாக வேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஒரு இளம்பெண் ஆண்கள் மட்டுமே இயக்கும் கனரக வாகனமான பேருந்தினை இயக்குவது சவாலான செயல் அதனை நான் இந்த இருக்கையில் அமரும்போதே தன் மனதில் இருத்திக் கொண்டதாகவும் தனக்களித்த பணியை திறம்படவும் பொறுப்பாகவும் காலையிலிருந்து இரவு சுமார் 11 மணிவரை கூட ஆகும் அதனிடையே ஒரு முறை கூட ஓட்டுனர் பணியில் எந்த இடையூறையும் நான் செய்ததில்லை எந்த விதத்திலும் கவனக்குறைவாக செயல்பட்டு எந்த சிக்கலையும் யாருக்கும் உருவாக்கிடவும் இல்லை என்றும் கவலையுடன் பேசியவர் எதற்கு என் மீது இத்தகைய புகார் எழுந்தது என்று பெரும் குழப்பத்துடன் இருந்தவர்,
திடீரென யாரும் எதிர்பாரா நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஷர்மிளா அவர்களை சந்திக்க முற்பட்டு அழைப்பதாகவும் தலைமை அலுவலகத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த செல்வி ஷர்மிளா தலைவரின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
நம்மவர் தலைவர் அவர்கள் ஷர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்று அன்பாக பேசியவர், இதுநாள்வரை உங்களைப் பற்றி பலர் சொல்லக் கேட்டும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளின் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், உங்களின் துணிச்சலை வெகுவாக பாராட்டுவதாகவும் அதே சமயம் இது போன்ற சவாலான பணிகளை பெண்கள் தங்கள் கைகளில் எடுத்து செய்யவேண்டும் என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தவர், சிரமம் என்று கருதுவதை சோர்ந்து போய் நின்றுவிடாமல் ஒவ்வொரு கட்டத்தையும் தைரியமாகவும் துணிச்சலாகவும் சவாலான கட்டங்களை வென்று முன்னேறி வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருவதற்க்கு பொருத்தமாக நீங்கள் பேருந்தினை இயக்கும் ஓட்டுனர் பணியை சிறப்பாக செய்து வந்தது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே அவருக்கு பேருந்து ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தான் வருத்தம் கொள்வதாகவும் தெரிவித்தவர். மேலும் உங்களின் துணிச்சலும் சவாலும் நிறைந்த ஓட்டுனர் பணி எக்காலத்திலும் நின்றுவிடக்கூடாது. ஓட்டுனர் என்பதை கடந்து அடுத்தகட்டமாக இளம் தொழில்முனைவோர் எனும் பட்டியலில் பெயர் இடம்பெறுமாறு ஷர்மிளாவே எதிர்பாராமல் இருந்த நேரம் திடீரென தான் மாருதி சுசுகி எர்டிகா எனும் XUV கார் ஒன்றினை பரிசாக அளிப்பதாக வாக்குறுதி தந்து உடனே அங்கே அப்போதே அதற்கான பணிகளை மேற்கொண்டு கார் வாங்கிட தேவையான தொகையினை வங்கி காசோலையாக அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட ஷர்மிளாவின் முகத்தில் இருந்த அத்தனை சோர்வு ரேகைகளும் காணாமல் போய் தான் இன்னும் சாதிக்கப் பிறந்தவர் எனும் மகிழ்ச்சி புன்னகை ததும்பி நிற்பதைக் காணலாம்.
ஒருவனுக்கு மீன் தருவதை விட அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவனது வாழ்க்கைக்கு நேர்மையாகவும் நியாயமாகவும் சம்பாத்தியம் கிடைக்கப் பெறும் அதனால் தனது குடும்பத்தினை சிறப்பாக வழிநடத்திச் சென்றிட ஏதுவாகிடும் எனும் ஓர் பழமொழி உள்ளது, பணி நீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவிற்கு வேறு ஏதேனும் ஓர் பணியோ அல்லது ஓட்டுனராகவே வேறு ஏதோ ஒரு நிறுவனத்தில் பணியமர்த்த தலைவரின் சிபாரிசு ஒன்றே போதும் ஆயினும் சவால் நிறைந்த பணியினை தேர்வு செய்த அப்பெண்ணுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ததை போன்று அவருக்கு கார் பரிசளித்து ஓர் இளம் தொழில் முனைவோர் ஆகிட அள்ளித் தந்த ஓர் உத்தம தலைவராக திரு கமல்ஹாசன் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் – தலைவர் நம்மவர்
ஷர்மிளாவுக்கு கார் பரிசு: கோவையை குறிவைத்து காய் நகர்த்துகிறாரா கமல்ஹாசன் (news18.com)
Kamal gifts a car to Coimbatore-based bus driver Sharmila (dtnext.in)
Follow-Up Post : July 07, 2023
கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு சுய தொழில் தொடங்க தன் முழு செலவில் அவர் விரும்பிய காரை இன்று வழங்கினார் நம்மவர் தலைவர் திரு. கமல்ஹாசன்
#Sharmila #Kovai #WomenBusDriver