சென்னை : ஜூலை ௦3, 2௦23

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அதே போன்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சியாக சென்னை மண்டலம் பொறியாளர் அணி நிர்வாகிகள் ஏற்பாட்டில், சென்னை வடமேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் பயனடையும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் என மூன்று நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனூடாக மய்யக்கொடி ஏற்றுதலும் சிறப்பாக நடந்தது. இவற்றை தொகுத்து அதன் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளது மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பாக, அதன் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சரவணன் ஏற்பாட்டில், சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு. கமல் கோமகன் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. Dr. வைத்தீஸ்வரன், மாநில நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், சமூக ஊடக அணி மாநில செயலாளர் திரு. கிருபாகரன் முன்னிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதி அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெரு ஹவுசிங் போர்டு விளையாட்டு மைதானம் அருகில் இலவச மருத்துவ முகாம், மய்யம் கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்க்கை முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் 02.07.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் திரு.மாடசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் திரு.சிவலிங்கம், திரு.விஸ்வநாதன், திரு.கென்னி, மாவட்ட அமைப்பாளர் திரு.கபாலி மற்றும் திரு.விக்னேஷ் உள்ளிட்ட நகர செயலாளர்கள், திரு.கோடீஸ்வரன், திரு.அருள் உள்ளிட்ட வட்ட செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் திரு.தேசிங்குராஜா, திரு.மாறன், திரு.நிலவழகன் ஆகியோரும், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.R.சரவணன், திரு.K.சரவணன், திரு.ரமேஷ் மற்றும் அணிகளின் மண்டல, மாவட்ட அமைப்பாளர்கள், நகர அமைப்பாளர்கள் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #KamalHaasan#மய்யநற்பணிகள்#MakkalNeedhiMaiam