ஆகஸ்ட் : ௦7, 2௦23

பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில் இருக்கிறது என்று ஆளும்கட்சியை சார்ந்த மேற்கு சூரத் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் அவசரகதியில் விசாரணை செய்யப்பட்டு திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வரவிருக்கும் 2௦24 ஆண்டில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டு தகுதி நீக்கமும் செய்யபட்டார் இந்த அதீத ஜனநாயக விதிமீறல்களை செய்து முடித்த குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பு விமரிசனத்திற்குள்ளானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது இரு தரப்பின் வாதங்களை கூர்ந்து கவனித்த நீதிபதி அமர்வு அவசரகதியில் மேற்கொள்ப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை தடை செய்வதாக அறிவித்துள்ளது மேலும் அவருக்கு அளித்த சிறைத்தண்டனை மற்றும் தகுதிநீக்கம் ஆகிய அனைத்தும் ரத்து செய்யபடுவதாக வழங்கிய தீர்ப்பு இந்திய மக்கள் மற்றும் பிற கட்சிகளின் அரசியல் தலைவர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜனநாயகம் நீர்த்துப் போய் விடுமோ என அஞ்சிய போது கிடைக்கபெற்ற இத்தீர்ப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வழக்கில் வென்றுள்ள நண்பரும் காங்கிரஸ் கட்சியின் மிக தலைவருமான திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வாய்மையே வெல்லும் என குறிப்பிட்டுள்ளது மிகச் சிறப்பு.

Rahulji, Power should not exist if it cannot dispense Justice; Justice can be dispensed only if there is truth and fairness; Truth can be appreciated only if people rise up to the occasion; The Hon’ble Supreme Court of India did so in your case, Rahulji!! If power is wielded only to exhibit might, even the unaffected common people get outraged. When that happens, those in power shall realize that justice will prevail, no matter what!! The Hon’ble Supreme Court of India acknowledges the increasing outrage of the common man and ensures justice!!

Thiru Rahulgandhi Satyameva Jayathe ! – Mr Kamal Haasan, President, Makkal Needhi Maiam