செய்யாறு – ஜூன் 19, 2௦23
மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில செயலாளர் திரு.வைத்தீஸ்வரன் அவர்கள். கட்டமைப்பு மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியினை காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.E.T.அரவிந்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சரவணன், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சரவணன், திரு.ஹரிஹரன், திரு.சரவணன், நகர அமைப்பாளர் கேட்சி சாம்ளா, காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.சண்முகம், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் திரு.சுதீர், மாவட்ட செயலாளர்கள் திரு.மூர்த்தி, திரு பாஸ்கர், திரு.கோமகன், செய்யாறு தொகுதியின் முன்னாள் வேட்பாளர் திரு.மயில்வாகனன் மற்றும் மய்ய உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.