மதுரை : ஜூலை 17, 2௦23

மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு மனதார ஏற்றுக் கொண்டு திரளான 100 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாய் இணைத்துக் கொண்டனர்.

மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், பாஸ்கர் நகரச் செயலாளர் திரு. இளங்கோ அவர்கள் முன்னிலையில் வட்டச் செயலாளர்கள் திரு.முருகன் திரு.ராஜா ரஹீம் திரு.செல்வக்குமார் திரு.சேகர் அவர்களின் ஏற்பாட்டில் 16.௦7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் 100 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மய்யத்தில் இணைந்தனர் – என மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டல ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.