சென்னை : ஜூன் ௦9, 2௦23

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பேரில் புது தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினார். அதன்பிறகும் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய திரு இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். இவற்றை கண்ட பல அரசியல் கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் மெது மெதுவாக மய்யம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவிருப்பதாகவும் அதே சமயம் வேறொரு முக்கிய கட்சியின் ஆதரவு செய்தி சேனல்கள் தடாலென சிறிதும் உண்மைதன்மைய்ற செய்தியான காங்கிரஸ் – மய்யம் இணைப்பு எனும் ஓர் திரிக்கப்பட்ட செய்தியை பரப்பி வருவதாக தெரிகிறது. இதனை மிகத்தெளிவுபட விவரிக்கிறார் மக்கள் நீதி மய்யம் பொதுசெயலாளர் திரு அருணாச்சலம் அவர்கள்.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் என்ன என்ற கேள்வி உட்பட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மய்ய பொதுச்செயலாளர்.