கோவை : ஜூலை 23, 2௦23
நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட திரைக்லைஞர் திரு கமல்ஹாசன் எனும் பெரும் ஆளுமையின் தலைமையில் கடந்த 2௦18 ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
மற்ற கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள் போலல்லாமல் தொகுதிகளின் பக்கம் அடிக்கடி சென்று மக்களிடம் கலந்து பேசி என்னென்ன குறைகள் உள்ளது என்றும் அவைகள் எவ்வளவு நாட்களாக, மாதங்களாக அல்லது வருடங்களாக செய்து முடிக்கப்படாமலும் உள்ளது என்றும் கேட்டு அறிந்து கொள்வதே மக்களோடு மய்யம்.
ஏனெனில் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அதிகாரம் கைக்கு வந்துவிடுகிறது அவ்வளவு தான் அடுத்து அவர்கள் நினைப்பதும் அதன்படியே நடப்பதும் தான் அவர்களாகவே நினைத்துக்கொண்டுவிட்ட எழுதப்படாத வாய்மொழிச் சட்டம்.
அவர்களைப் போலல்லாமல் தான் வெற்றி பெறாத போதிலும் கோவை தெற்கு தொகுதிக்கு தமது சொந்த செலவிலும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அத்தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து தந்துள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் அவர்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த செல்வி ஷர்மிளாவிற்கு புதிய கார் ஒன்றும், சாலை விபத்தில் அதே நாளில் அதே இடத்தில தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியை பறிகொடுத்த சேலத்தை சேர்ந்த மாணவி செல்வி அமுதா அவர்களுக்கும் உதவித் தொகையாக மேற்கொண்டு கல்வி பயிலும் வகையில் 3 லட்ச ரூபாய் வருங்கால வைப்பு நிதியாக கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பாக அளித்தார்.
கட்சியின் செயல்பாடுகளை முன்னைக்காட்டிலும் இன்னும் உத்வேகமாக செயல்படுமாறு ஆலோசனைகள் வழங்கி தமிழகம் முழுக்க 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமித்து அவர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன குறைகள் தீர்க்கப்படாமல் உள்ளது என அந்தந்த பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்து அதே சமயம் உங்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்திட என்ன வகையான நடவடிக்கைகள் நீங்கள் தேவையென கருதுகிறீர்கள் என கருத்து கேட்பதும் துவக்கப்பட்டுள்ளது. அதன் முதன் தொகுதியாக கோவை தெற்கில் இருந்து துவங்கியுள்ளது “மக்களோடு மய்யம்”
நன்றி : இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் மூலமாக கிடைத்த தகவல்களோடு தொகுக்கப்பட்டது