சென்னை : ஜூலை ௦7, 2௦23

Updated : ஜூலை ௦9, 2௦23

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவியான செல்வி V. அமுதா +2 பொதுத்தேர்வு எழுதி 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்வான நிலையில் உயர்படிப்பிற்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் தனது தாய் மாரியம்மாள் தந்தை வெங்கடாசலம் மற்றும் அக்கா பூங்கொடி ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியுற்ற அமுதா செய்வதறியாது நிற்கையில் மாவட்ட நிர்வாகம் மூலமாக மேற்கொண்டு கல்லூரிப் படிப்பும் வீடு கட்டிக்கொள்ள இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றையும் வழங்கிச் சென்றனர். இதனிடையே இதனை கேள்வியுற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மாணவி அமுதாவை சென்னைக்கு மய்யத் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து ரூபாய் மூன்று லட்சம் நிரந்தர வைப்பு நிதியை மாணவியின் பெயரில் கனரா வங்கியில் முதலீடு செய்து அதற்கான வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார், கல்வி பயில மேற்கொண்டு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் என்னை தொடர்பு கொள்ளலாம் என அன்புடன் பேசி விடை தந்தார்.

இது குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாணவி செல்வி V அமுதா அவர்கள் ம.நீ.ம தலைவருக்கு மனதார நன்றி தெரிவித்தார் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பை நிச்சயம் எந்தவித தடங்கலோ இடையூறோ இன்றி கற்று முதன்மையாக வருவேன் என்றும் அவரிடம் கூறியதாக தெரிவித்தார்.

இப்போது இந்த செய்திக் கட்டுரையின் தலைப்பை மீண்டும் படியுங்கள்

மகளே, உனைப் பெறாத தாயும் நானே : தந்தையும் நானே – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவரும், சாலை விபத்தில் தாய், தந்தை, அக்காவை இழந்த சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி கிராமம், செம்பாய்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி செல்வி.அமுதாவிற்கு “கமல் பண்பாட்டு மையம்” சார்பாக ரூ.3 இலட்சம் உதவித்தொகையை நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வழங்கினார். மேலும், நம்பிக்கையோடு தொடர்ந்து படிக்குமாறு மாணவியை ஊக்கப்படுத்தி‌ அறிவுரை வழங்கினார். – மக்கள் நீதி மய்யம், தலைமை அலுவலகம்

#KamalHaasan #MakkalNeedhiMaiam #மய்யநற்பணிகள்