செப்டெம்பர் : 21, 2௦23

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமலே இருந்தது.

2௦18 மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கும் போதும் பின்னர் 2௦19 இல் சந்தித்த பாராளுமன்றத் தேர்தல் போதும் சரி 2௦21 ஆம் ஆண்டில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அறிக்கையிலும் மகளிருக்கான உரிமைகளை கோடிட்டு காட்டத் தவறவில்லை தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள். திரைப்பட நடிகராக கோலோச்சிக் கொண்டிருக்கும் போதே தனது படங்களில் மகளிருக்காக குரல் கொடுக்கத் தவறியதில்லை.

இதனிடையே புது தில்லியில் அமைந்துள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிருக்கான 33% சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகும். அதனை ஆளும் பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சரான அர்ஜுன்ராம் மெஹ்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்த விவாதத்தில் பல முக்கிய விவகாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. எதிர்கட்சிகளின் காரசார கேள்விகளுக்கு சரியான தகவல்களை தராமல் ஆளும் கட்சினர் அமளியில் ஈடுபட்டது வேடிக்கைக்குரியது.

கடந்த 2௦14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த பிஜேபி அரசின் பல அணுகுமுறைகள் ஆன அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரிசர்வ் வங்கியின் பழைய 1௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் தாள்கள் செல்லாது என்று 2௦16 இல் வெளியான அறிவிப்பு பல்லாயிரக்கனக்கான மக்களை வீதிக்கு அலைகழித்தது முதல், மாதந்தோறும் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலையேற்றமும் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரூ.11௦௦ கடந்து நிற்கிறது என்பது வரை சொல்லொனாத் துயரங்கள் செய்து முடித்த பிஜேபி அரசு அடுத்த ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலான 2௦24 இல் வரவிருப்பதை முன்னிட்டு அவசர அவசரமாக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்தும் பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அப்படி தனது பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தோற்றுவிக்க முதல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளது தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் இந்த ஆட்சியின் இறுதிகட்ட பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான அன்று இதைத் தாக்கல் செய்யப்பட்டது குறித்து இரு அவைகளிலும் இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆமோதித்தது சுமார் 454 பேரும் இதே மசோதாவை எதிர்த்து 2 ஓட்டுக்களும் பதிவானது. இந்த மசோதாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவையின் எதிர்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் MP யுமான திரு ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதனை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் கூறியதாவது, “நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள், நமது ஜனநாயகத்தின் இருக்கை அதன் புதிய வீட்டிற்கு மாறியது. இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா, நமது தேசத்தின் மிகப்பெரும் சிறுபான்மையினரான இந்தியப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்டகால அநீதியைச் சரி செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும். இந்த மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது, ​​பின்வரும் கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தமது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

A landmark day in the history of our Republic, as the seat of our democracy moved into its new home. I’m delighted that the first Bill tabled in this new Parliament corrects a longstanding injustice perpetrated against the largest minority in our nation, the women of India. I wholeheartedly applaud the Women Reservation Bill tabled yesterday. Nations that ensure gender equality will always prosper. During the Parliamentary discussion on the Bill, I call upon all parties to address the following concerns: – The Bill comes into effect only after the next census and delimitation exercise, both of which have been delayed in the past. This delayed implementation timeline risks making this momentous decision into mere lip service towards the subject and must be done away with. – The Bill only applies to Lok Sabha and State Assemblies and must be extended to Rajya Sabha and State Legislative Councils. I look forward to the day when women will have proportional representation in legislative bodies without the aid of any affirmative action.

#WomenReservationBill

https://x.com/ikamalhaasan/status/1704329910825951446?s=20

https://x.com/maiamofficial/status/1704369907465687534?s=20

https://x.com/news7tamil/status/1704701171611611610?s=20