செப்டம்பர் 20, 2023

மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூறு வயதை முன்னிட்டு கலைஞர் 100 எனும் புத்தகத்தை விகடன் பிரசுரம் சார்பில் பதிப்பித்து வெளியிடும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவரும், நமது தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களும் அழைக்கப்பட்டார்கள். மேலும் கலைஞர் 100 அச்சுப் பிரதியை (புத்தகம்) முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் உரை அரங்கத்தில் இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது, குறிப்பாக தனக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த நட்பு பற்றிய பல சுவாரசியமான தகவல்களை நினைவு கூர்ந்தார், கலைஞர் அவர்களின் எழுத்து குறித்தும் சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

https://x.com/maiamofficial/status/1704551021396246615?s=20

https://x.com/maiamofficial/status/1704551021396246615?s=20


#கலைஞரும்‌_கலைஞானியும்
#KamalHaasan #MakkalNeedhiMaiam