செப்டெம்பர் : 11, 2023

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய வீரர்களில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். பரங்கியரின் பீரங்கிகள் துப்பாக்கிகள் எல்லாம் இவருடைய பேனாவிற்கு பயந்து நின்றது என்பது நிதர்சனமான உண்மை. அவர் எழுதிய கவிதைகள் பாடல்கள் எல்லாமும் தீ போல் பற்றி எறிந்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவர் மனதிலும் அது கங்கு போல் கனன்றது. ஆங்கிலேயர்கள் அலறினார்கள் படைகளை வைத்துத் தேடினார்கள் சுதேசமித்திரன் எனும் பத்திரிக்கையை பல நெருக்கடிகள் தந்து நிறுத்தச் செய்தார்கள் இப்படி பலவகைகளில் பரந்கியருக்கு simma சொப்பனமாக விளங்கிய மகாகவி சுப்ரமணிய பாரதியார் நமது நாட்டின் சொத்து அவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூடியிருந்தோரிடம் பெருமை பொங்கச் சொன்னவர் நமது நாட்டின் தேசப்பிதா என்றழைக்கப்பட்ட காந்தியடிகளார். இப்படிப் பெரும்புகழ் பெற்ற பாரதியார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தரிசித்துவிட்டு வருகையில் அங்கிருந்த யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவடைந்தார் சிறிது காலங்களில் இந்தியா சுதந்திரம் அடைந்துவிடும் என்று உரக்கப்பாடியவர் அன்றைக்கு 1921 செப்டெம்பர் 11 ஆம் தேதியன்று தனது 38 ஆவது வயதிலேயே அகாலமாய் மரணமடைந்தார்.

சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று விடாது கொழுந்துவிட்டு எறிந்த தீ அணைந்தே போனது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உயர்மிகு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் தீவிர பற்றாளர் என்பதற்கு அவருடைய சமூக ஊடக கணக்குகளில் உள்ள தன் புகைப்படங்களில் பாரதியாரின் உருவத்துடன் பதித்துக் கொண்டதில் இருந்தே காணலாம். முந்தைய படங்களில் அவருடைய கவிதைகளை அவசியமான காட்சிகளின்போது வசனமாக பாடலாகவோ வைத்துக் கொள்வதாகட்டும் எங்கே எப்போது அவரைப் பற்றிய பேச்சுகளில் எழுதிய கவிதைகளை உச்சரிப்பதிலாகட்டும் நம்மவருடைய மனதில் என்றும் அழுத்தமாக பதிந்திருக்கும் பாரதியார் அவர்களுக்கு செய்யும் பணிவிடையாக எண்பதுகளில் தான் ஆசிரியராக கொண்டு வெளிவந்த மய்யம் எனும் மாத இதழில் (கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 33 ஆவது வயதில்) பாரதியாரின் கவிதைகளை தனது தாய் என குறிப்பிட்டு அவரது 5௦ ஆவது வயதையொட்டி தமிழ் மழலை பாரதியை நமஸ்கரிக்கிறது எனும் தலைப்பில் ஓர் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டு சமர்ப்பித்து இருந்தார். அதாவது தமிழை மழலையாகவும் பாரதியாரை நோக்கி வணங்கி நிற்பதாகவும் குறிப்பிட்டு அன்றைக்கு எழுதியதை பாரதியாரின் நினைவு நாளான இன்று நினைவு கூர்ந்து அதன் நகலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கதும் முதன்மையானதும் என இச்சமூகத்தில் உலவும் மனிதரிடையே எந்த உயர்வும் தாழ்வும் இருக்கக் கூடாது என்றும் அவர்களில் யாரும் யாருக்கும் அடிமைகளும் இல்லை ஆயினும் எல்லோரும் மன்னர்களே எனும் பொருள்பட பாடியுள்ளதையும் தான் தற்போது நிலவிவரும் சூழலில் பாரதி அவர்களை நினைவு கூர்ந்து போற்றுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை. பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’ மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்