செப்டெம்பர் : 15, 2௦23

பேரறிஞர் அண்ணா அவர்கள் நமது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை கொண்டு வந்தார் அதனை ஆட்சியின் வழியாக அமல்படுத்தினார்.

தென்னாட்டு பெர்னாட்ஷா என்பார்கள், எங்கு பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் அங்கே பேசத் துவங்கினால் அவரது நாவில் இருந்து எதுகை மோனையுடன் தமிழ் துள்ளி விளையாடும். உவமைகள் மேற்கோள்கள் இறக்கை விரித்து பறக்கும், என்ன பேசுகிறாரோ எதைப்பற்றி பேசுகிறாரோ அதை ஒவ்வொரு புள்ளியாக அணு அணுவாக மக்களுக்கு தெளிவாக புரியும்படி எடுத்து வைப்பார். மூலை முடுக்கெல்லாம் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். மிகச்சிறந்த பேச்சாளர் ஆக கோலோச்சியவர். இன்னும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஓர் நிகழ்வை சொல்லலாம் அது ஓர் பொதுகூட்டத்தில் மிகக் குறுகிய நேரம் உள்ளபடியால் பத்து நிமிடங்கள் மட்டும் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டதையடுத்து பத்து என்ற சொல்லை வைத்து பல மணி நேரங்கள் பேசினார் என்று அறியப்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு. கமல்ஹாசன் அவர்கள் புகழுரை வெளியிட்டுள்ளார்.

பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று சொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான். தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.திரு.கமல்ஹாசன் – தலைவர், மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1702556472704643514?s=20