அக்டோபர் 23, 2023

சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய இருவரும் முறையே ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார்கள். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமார், வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். திரு.கமல்ஹாசன்

https://x.com/ikamalhaasan/status/1716445071036625067?s=20

#AsianParaGames2022

https://x.com/ParalympicIndia/status/1716279261848584690?s=20