திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023

1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது). பின்னாளில் அவையே மருவி கேரளம் என்றானது. நமது தமிழகம் போன்றே கேரளா பல பெருமைகளை உள்ளடக்கியது. கதகளி எனும் பாரம்பரிய நடனம், ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் என்றும் இந்தியாவின் நறுமணத் தோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. மட்டுமல்லாது இந்தியாவின் முதல் டிஜிடல் மாநிலம் எனும் பெருமையும் பெற்றது கேரள மாநிலம்.

நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் திரையுலக வரலாற்றில் கேரள மொழியில் அவர் நடித்த பல திரைப்படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரள முதல்வரின் அபிமானத்திற்குரிய ஓர் ஆளுமையாக நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் திகழ்வதும், இன்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் பெரும் ஆளுமைகளாக இயங்கிவரும் திரு மோகன்லால் திரு மம்மூட்டி அவர்களும் நம்மவர் மீது பெருமதிப்பு கொண்டுள்ளார்கள், இன்னும் சொல்லப்போனால் கேரள திரையுலகில் நம்மவர் மீது மிகுந்த மதிப்புண்டு.

கேரள மாநிலம் உருவாகி 66 ஆண்டுகள் நிறைவுபெறுவதை அரசு சார்பில் விழாவாக கொண்டாடிய விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை தமிழக பிரதிநிதியாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவ்விழாவில் கேரள மாநிலத்தின் முக்கிய ஆளுமைகள் திரைக்கலைஞர்கள், நடனக் கலைஞர், பல் துறை வல்லுனர்கள் பலரும் பங்குகொண்டனர்.

பிரம்மாண்ட அரங்கில் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் முன்னே விழா மேடையில் பலரும் அமர்ந்திருக்க திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது உரையை துவக்கினார், தமிழில், மலையாள மொழி என துவங்கி பின்னர் ஆங்கிலத்தில் அழகிய சொல்லடுக்குகளை வைத்து தனது பேச்சால் ரசிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் பல நிகழ்வுகளை கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் அவர்களின் தலைமையில், நம்மவர் திரு கமல்ஹாசன், திரு மோகன்லால், திரு மம்மூட்டி, செல்வி ஷோபனா ஆகியோர் விளக்கேற்றி துவக்கி வைத்தனர். மேலும் அங்கிருந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் அனைவரும் நம்மவரை கேரளியம் 2023 பேழையை அளித்து கௌரவித்தனர்.

Yesterday, on the occasion of the state of Kerala’s 67th anniversary, I had the honor of attending Keraleeyam2023 in the presence of Hon. CM Thiru Pinarayi Vijayan. I spoke on the achievements of Kerala in universal healthcare, education and devolution of powers to local body institutions. Also had the pleasure of meeting my friends Thiru Mohanlal and Thiru Mammootty.Thiru. Kamal Haasan, President – Makkal Needhi Maiam

இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ”கேரளீயம் 2023” நிகழ்ச்சியில் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுடன்..!!மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1719901845194232109?s=20

https://x.com/maiamofficial/status/1719701698456011119?s=20

https://x.com/maiamofficial/status/1719630605959491845?s=20

https://x.com/maiamofficial/status/1719590020842181070?s=20

https://x.com/maiamofficial/status/1719332313744695375?s=20

https://t.co/Y4Is5mIEed

#KamalHaasan #MakkalNeedhiMaiam #Keraleeyam2023