நவம்பர் 07, 2023

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழகத்தின் இல்லையில்லை இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞர் திரு.கமல் ஹாசன் அவர்கள் என்றால் மிகையாகாது. நவம்பர் மாதம் துவங்கியதும் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகம் தொற்ற வலம்வருவது ஒவ்வொரு வருடமும் அந்த நாள் பெரும் கொண்டாட்டமாக கொண்ட நாளாக அமையும். அந்நாளில் தனது அபிமான கலைஞனை நேரில் கண்டு வாழ்த்து கூறுவதும் அதில் கிடைக்கபெறும் அந்த அளவற்ற சந்தோசம் அன்றைக்கு துவங்கி அடுத்த பிறந்தநாள் வரை தொடரும். நற்பணி இயக்க கிளைகளில் அம்மாதத்தின் முதல் நாளன்று தொடரும் நற்பணி கிட்டத்தட்ட அந்த மாத இறுதிவரை தொடரும். ஆங்காங்கே உணவளிப்பது, துணிமணிகள், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது, சரியான வருமானம் இல்லாத குடும்பத்திற்கும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், பிள்ளைகளின் கல்விக்கு இயன்றவரையில் கட்டணத்திற்கான பண உதவி என பணிகள் எந்த சுணக்கமும் இல்லாமல் நடைபெறும்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரத்ததானம் மற்றும் உடல்தானமும் தவறாமல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மவரை திரைப்பட நடிகராக மட்டுமே எண்ணிவிடாமல் நேர்மைமிகு தலைவனாக விளங்கிவரும் ஓர் ஒப்பற்ற மாமனிதராக திகழ்ந்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவரின் 69 ஆவது வயது பிறந்தநாள் விழா சென்னை நீலாங்கரை R.K.கன்வென்ஷன் மையத்தில் மதியம் 3 மணியளவில் சிறுவர், சிறுமியர், மகளிர் மற்றும் ஆடவர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய கிராமிய நடனங்களுடன் துவங்கியது, தப்பாட்டம், பறை வாத்தியங்கள் ஒலிக்க களைகட்டத் தொடங்கியது. சுமார் நான்கு மணியளவில் அங்கு கூடியிருந்த சுமார் 6௦௦௦ இற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கு இருகரம் கூப்பி ஏற்றுக் கொண்டே தலைவர் அவர்கள் அரங்கிற்கு வருகை தந்தார்.

நம்மவர் தலைவர் அரங்கத்திற்குள் நுழைந்ததும் ஆண்டவரே, தலைவரே, நம்மவரே, உலகநாயகனே, நேர்மைத் தலைவனே, பத்மஸ்ரீ விருதுக்கு பெருமை சேர்த்த திரையுலகின் சக்கரவர்த்தியே எனவும் மாற்றம் தரும் மக்கள் நீதி மய்யத்தின் மாசற்ற தலைவரே என்றும் எழுந்த கோஷங்கள் அந்த பிரம்மாண்ட அரங்கத்தை சற்றே குலுங்க வைத்தது எனலாம்.

நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளிற்கு மாநில முதல்வர்கள், அண்டை மாநில அரசியல் தலைவர்கள், நமது தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள், திரையுலக ஜாம்பவான்கள், பல்வேறு துறைகளின் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

https://fb.watch/obwbWpmb8Y/?mibextid=NnVzG8

https://x.com/maiamofficial/status/1721569691544768517?s=20

https://x.com/maiamofficial/status/1721833085942247755?s=20

https://x.com/maiamofficial/status/1721728495930536071?s=20

https://x.com/maiamofficial/status/1721776631419994343?s=20

https://x.com/maiamofficial/status/1721786079928578451?s=20

https://x.com/ikamalhaasan/status/1721778771639070773?s=20

https://x.com/sunnewstamil/status/1721757471314776421?s=48&t=K7WyKhHLaVYo3h0E7a37eA

https://www.facebook.com/share/v/pV9LRbMHtAi76oFB/?mibextid=KZ7vgw

https://x.com/news18tamilnadu/status/1721784617504784528?s=48&t=K7WyKhHLaVYo3h0E7a37eA

https://x.com/News18TamilNadu/status/1721771917164880333?s=20

https://x.com/ThanthiTV/status/1721745093202456580?s=20

https://x.com/TamilTheHindu/status/1721803951732125752?s=20

https://x.com/maiamofficial/status/1721819373369950246?s=20

https://x.com/maiamofficial/status/1721856992850108740?s=20

https://x.com/ikamalhaasan/status/1721805099796963663?s=20

https://x.com/ikamalhaasan/status/1721825157059068198?s=20

https://x.com/ikamalhaasan/status/1721837363096158500?s=20

https://x.com/ikamalhaasan/status/1721845002236510550?s=20

https://x.com/ikamalhaasan/status/1721860466366874025?s=20

https://x.com/ikamalhaasan/status/1721866386409136606?s=20

https://x.com/maiamofficial/status/1721870396654551486?s=20

https://x.com/ikamalhaasan/status/1721870514489299151?s=20

https://x.com/ikamalhaasan/status/1721873066140270979?s=20

https://x.com/ikamalhaasan/status/1721876767001243917?s=20

https://x.com/ikamalhaasan/status/1721878310928757042?s=20

https://x.com/ikamalhaasan/status/1721881053818986696?s=20

https://x.com/ikamalhaasan/status/1721882889338663096?s=20

https://x.com/ikamalhaasan/status/1721884332862943485?s=20

https://x.com/ikamalhaasan/status/1721884860149793049?s=20

https://x.com/ikamalhaasan/status/1721885737396949041?s=20

https://x.com/ikamalhaasan/status/1721892772779843638?s=20

https://x.com/ikamalhaasan/status/1721898343163642136?s=20

https://x.com/ikamalhaasan/status/1721908145595822411?s=20

https://x.com/ikamalhaasan/status/1721914799955517704?s=20

https://x.com/ikamalhaasan/status/1721917481772630221?s=20

https://x.com/ikamalhaasan/status/1721918804995789153?s=20

https://x.com/ikamalhaasan/status/1721920963141677545?s=20

https://x.com/ikamalhaasan/status/1721922723775914242?s=20

https://x.com/ikamalhaasan/status/1721924165156909274?s=20

https://x.com/ikamalhaasan/status/1721925163774587087?s=20

https://x.com/ikamalhaasan/status/1721925938386993629?s=20

https://x.com/ikamalhaasan/status/1721927936478159203?s=20

தமது பிறந்தநாளிற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றியினை கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் தலைவர் அவர்கள்.

எத்தனையெத்தனை இதயங்கள்… அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்”. திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்