நவம்பர் 07, 2023

மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக மக்கள் நீதி மய்யத்தின் பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் நம்மவரின் பிறந்தநாள் விழா மேடையில் பேரன்புடன் வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்ட தலைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் “எனது பிறந்தநாளிற்கு கேக் வெட்டி கொண்டாடுவதோ, மாலை, சால்வை பொன்னாடை போர்த்திக் கொள்வதோ எனக்கு திருப்தியை தராது அதனால் தான் நமது கட்சியினரை அவைகளை பரிசாக தருவதை தவிர்க்கச் சொல்கிறேன். இன்றைக்கு எனக்கு கிடைத்த இந்த புத்தகங்கள் அவ்வளவும் பொக்கிஷம் ஆகும். ஒருவேளை கொஞ்ச காலத்திற்கு பின்னர் இந்தப் புத்தகங்கள் மக்கிப் போகக் கூடும் ஆனால் அதில் உள்ள தகவல்கள் கருத்துகள் எல்லாம் நமது புத்திக்குள் வந்து சேர்ந்து விடும், அத்தைகைய அழகான பரிசிற்கு பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.

“வாசிப்பை நேசிக்கும் நம்மவருக்கு மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் புத்தகங்கள், பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டன”.

https://x.com/maiamofficial/status/1721870396654551486?s=20

#KamalHaasan #MakkalNeedhiMaiam #HBDKamalSir