நவம்பர் : 21, 2023

தமிழகத்தின் புகழ்பெற்ற கண் சிகிச்சை மருத்துவமனை சங்கர நேத்ராலயா. அதன் நிறுவனரும் தலைமை மருத்துவருமான திரு.S.S.பத்ரிநாத் (வயது 83) (24.02-1940 – 21.11.2023) அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கற்செய்தி வெளியிட்டுள்ளார்.

“புகழ்பெற்ற கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. பல நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களிடையேயும் தன் திறத்தால் மரியாதையை ஈட்டியவர். லட்சக்கணக்கானவர்களுக்கு பார்வைச் செல்வத்தை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து பணியாற்றி வந்தவர். மருத்துவர் பத்ரிநாத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் நம்மோடு இல்லையென்றாலும், ஏராளமானவர்களின் கண்களிலும், அவர்தம் குடும்பத்தாரின் இதயங்களிலும் என்றும் இருப்பார்”.- திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1726952019481768240?s=20

#ShankaraNethralaya #DrSSBadrinath #EyeHospital