டிசம்பர் 01, 2023

ஏதோ ஒரு வழியில் ஏதுமறியா பிள்ளைகள் எயிட்ஸ் பாசிடிவ் ஆக பாதித்தது யாரால் எனும் வாதத்தை தள்ளி வைத்து, இறுதியின் விளிம்பில் நின்ற, நிற்கும் உயிர்களை இழுத்துப் பிடித்து காத்ததும், காப்பதும் நமது கடமை. அதைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர், நம்மவர் திரு.கமல்ஹாசன் & Hello FM CEO திரு.ராஜீவ் நம்பியார் ஆகிய இருவரின் தலைமையில் துவக்கப்பட்டது தான் பெற்றால் தான் பிள்ளையா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (ட்ரஸ்ட்).

குழந்தைகள் உட்பட வயது முதிர்ந்தவர் என வயது பாகுபாடின்றி ஆதரவற்றோர் எவர் இருந்தாலும் அவர்களை பராமரிக்க உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து கவனித்துக்கொள்ள பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கான நிதி உதவிகள் பலரிடம் இருந்தும் நன்கொடையாக பெறப்பட்டு அவற்றின் மூலமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சரி, இவர்கள் எல்லாம் பராமரிக்கப்படுகிறார்கள், ஆனால் இவர்களை எல்லாம் கடந்து எயிட்ஸ் தாக்கப்பட்டுள்ள குழந்தைகள் எப்படி யாரால் பராமரிக்கப்படுகிறார்கள் எனும் கேள்வியும் எழுகையில் கூடவே தீர்க்கப்பட இயலாத கிருமிகள் தாக்கப்பட்டால் கூட அவர்களை ஒதுக்கிவைத்து அச்சமுறும் இச்சமூகம் எய்ட்ஸ் கிருமி தாக்கப்பட்டவர்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிடாதா எனும் கேள்வியும் எழும். இந்த உலகில் பல தொற்றுநோய்களின் தாக்கம் இருந்துள்ளன, படிப்படியாக அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலமாக கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த எயிட்ஸ் மூலம் ஒருவர் பாதிக்கபட்டால், அவர்களை தொடுவதால், கட்டி அணைப்பதால், அவர்கள் உபயோகித்த பொருட்களை அதாவது உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பிறர் உபயோகிப்பதால் அல்லது முத்தம் கொடுத்துக் கொள்வதால் எல்லாம் அந்த நோய் வேறு யாருக்கும் பரவாது எனும் விழிப்புணர்வை அதனால் உண்டாகும் புரிதல் இல்லாதவர்களின் பார்வையில் அந்நோய் தாக்கப்பட்டுள்ளவர்கள் நிச்சயமாக புறக்கணிக்கப்படுவார்கள், இதுவே அவர்கள் சராசரி வயதையுடையவர்கள் என்றால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடும் (மிகச்சரியாக சொல்வதென்றால் அப்படி கூட அவர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ள அவசியமே இல்லை என்பதே ஆகப்பெரிய உண்மை) ஆனால் இதே குழந்தைகள் என்றால் அவர்களுக்கு எப்படி இந்த நிலை தங்களுக்கு ஏற்பட்டது என்றோ இதன் விளைவு என்னவேன்பதோ நிச்சயமாக புரிய வாய்ப்பே இல்லை.

எல்லாம் சரி கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்நோயினால் தாக்கம் ஏற்பட்டுவிட்டது என்றால் அது பிறந்த பின்னர் எப்படி என்று வரை உயிர்வாழக்கூடும் என்பதும், அதுவே வளர வளர சராசரி குழந்தைகளுக்குண்டான படிக்கவும், விளையாடவும் என ஆசைகள் உண்டாகும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இவையெல்லாம் எப்படிக் கிடைக்கும் ?

இந்தக் கேள்விகள் எல்லாம் ஒன்றாக எழுந்ததும் உருவானது தான் பெற்றால் தான் பிள்ளையா எனும் அமைப்பு. இங்கே முக்கிய குறிக்கோளாக நோய்த் தாக்கம் ஏற்பட்ட குழந்தைகளை அரவணைத்து அவர்கள் வாழும் நாட்களுக்கு அவர்களின் தேவையறிந்து அவற்றை செய்து தருவதும் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் தான் என முடிவு செய்யப்பட்டது.

எனவே அவர்களை அவர்களின் எதிர்காலம் கருதி காப்பதே இந்த பெற்றால் தான் பிள்ளையா எனும் அமைப்பின் தலையாய கடமையாக கையில் எடுத்துக்கொண்டு அத்தோடு நின்றுவிடாமல் முறையாக அதற்குண்டான முன்னெடுப்புகளைத் துவங்கியது இந்த அமைப்பு. உறைவிடமும், மருத்துவ சிகிச்சைகளையும், விளையாட்டு, கல்வி என அத்தியாவசிய தேவைகளை தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு தந்து வருகிறது.

எப்படி எதனால் இந்த கிருமி தாக்கியது என பிறக்கும் எந்தக் குழந்தையும் அறிய முடியாது, தன்னைப் பெற்றவர்களில் எவரிடம் இருந்து இந்த நோய்த் தாக்கியது என நதிமூலம் கண்டுகொள்வதும் மிகச் சிரமமே. இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களுக்கு கூட இந்த நோயின் பாதிப்பு எப்படி வந்தது என்பதும் கூட தெரியாமல் போகலாம், முன்பே இந்த நோய் பாதித்த ஒருவரிடம் இருந்து அஜாக்கிரதையாக, முறையாக பரிசோதிக்காமல் செலுத்தப்பட்ட ரத்தம் மூலமாகவும் எய்ட்ஸ் நோய் கருவிலிருக்கும் குழந்தையை தாக்கியிருக்கலாம். இதனை நுட்பமாக அறிந்துகொள்ள இயலாத காலங்களில் பரிசோதனைகள் துல்லியமாக காண்பிக்க முடியாத காலத்தை விட உலக அரங்கில் அறிவியலும் மருத்துவமும் படிப்படியாக பலகட்ட கட்டமைப்புககளுடன் உருவாகத் தொடங்கியதும் இதனால் உண்டாகும் பாதிப்பை வெகுவாக கட்டுபடுத்தி வருகிறது என்பதும் குறிப்பித்தக்கது. இதனிடையே பாதித்த ஆதரவற்ற குழந்தைகள் யாரும் கண்டுகொள்ளப்படாமல் இருந்ததும் அவர்களையும் இந்தச் சமூகம் புறந்தள்ளி வைக்கும் எனவே அவர்களை பாதுகாப்பதும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்ட பெற்றால் தான் பிள்ளையா அமைப்பு அவர்களை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு அவர்களின் தினசரி தேவைகளை படிப்படியாக தந்துள்ளது, நாளடைவில் இயன்றவரை அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த இறுதி நொடிகள் வரை அவர்களுக்கு வலியற்ற ஓர் முடிவையாவது அவர்களுக்கு தரலாம் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் மருத்துவம் அளித்த நுட்பங்களினால் அவர்களின் சராசரி வாழ்க்கையின் ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டு போனதாவும், அதில் பலர் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து பணிபுரியவும் துவங்கி விட்டதாக ஓர் நேர்காணலில் சொல்லி இருந்தார் நம்மவர்.

இந்த அமைப்பிற்கு பலரும் பொருளாதார ரீதியாகவும் தன்னார்வலர்களாகவும் தமது பங்கினை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் மேற்கண்ட இருவரையும் நிறுவன தலைவர்களாக கொண்டு இயங்கிவரும் பெற்றால் தான் பிள்ளையா எனும் தொண்டு நிறுவனம் இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி சிறப்பான வாழ்க்கையை தந்துள்ளது எனலாம்.

“எய்ட்ஸ் என்ற வார்த்தையை உச்சரிக்கவே பெரும்பாலானோர் அஞ்சிய காலத்தில், கொஞ்சமும் தயங்காமல் “உயிர் காப்பதே நம் நோக்கம்” என்று முழங்கி “பெற்றால்தான் பிள்ளையா” என களமிறங்கியவர் நம் தலைவர் நம்மவர். அவர் காட்டிய வழியில் இந்த அருந்தொண்டினைத் தொடர்வோம்.”மக்கள் நீதி மய்யம்

https://x.com/maiamofficial/status/1730579674366128138?s=20


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #WorldAIDSDay