நவம்பர் : 29, 2023

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்பதில் பல கட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு எந்த வகையில் மீட்கப்பட வேண்டும் என்று மீட்டுக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டனர். தொடர்ச்சியாக 17 நாட்கள் போராடி சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களையும் எந்த உயிர்ச்சேதம் இல்லாமல் பத்திரமாக மீட்டனர். மீட்கும் பணியானது சுமார் நானூறு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே சிக்கியிருந்தனர். இத்தகைய பணியை துரிதமாக செய்து முடித்த மீட்புக் குழுவிற்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள், அந்த தொழிலாளர்கள் நாம் மீட்கப்படுவோம் என்று உறுதியான மனநிலையுடன் அமைதி காத்தததற்கு பலனாக அமைந்தது இந்த மீட்புப் படலம் எனவும் கருதியிருந்தார்.

உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது. 17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்”.திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1729786916651102588?s=20

17 நாட்கள் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட உத்திரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்கள்!!! மாபெரும் வெற்றிச் சாதனையை நிகழ்த்திய மீட்புப் பணியாளர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!மக்கள் நீதி மய்யம்

https://x.com/maiamofficial/status/1729842945874960703?s=20

#MakkalNeedhiMaiam #KamalHaasan #UttarakhandTunnelRescueOperation

https://x.com/sunnewstamil/status/1729793197256163347?s=20

#UttarakhandTunnelRescueOperation