மே 01, 2024

உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளாக மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.

“உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.”மக்கள் நீதி மய்யம்

மே தின விழா கொண்டாட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழாவில் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கிச்சட்டை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு பழங்கள், பழச்சாறு, நீர் மோர், இனிப்புகள் வழங்கப்பட்டது.

அனைத்திற்கும் மேலாக கட்சியின் பெயரான மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் இலச்சினை பொறிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும் விநியோகம் செய்யப்பட்டன என்பதும் கூடுதல் சிறப்பு.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #MayDay #LabourDay #LabourDay2024