சென்னை : தலைமை அலுவலகம் : ஏப்ரல் 16, 2௦23

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை கூட்டம் இன்று (ஏப்ரல்-15) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் திரு பொன்னுசாமி தலைமையில், துணைத்தலைவர் திரு மௌரியா மற்றும் பொதுச்செயலாளர் திரு அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகிக்க தொழிலாளர் அணி மற்றும் தொழிற்சங்க பேரவை மாநில & மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொள்ள சிறப்புற நடைபெற்றது. இதில் தொழிலாளர் அணி மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

தொழிலாளர் அணி மற்றும் தொழிற்சங்க பேரவை கூட்டம் மாநிலச் செயலாளர் பொன்னுசாமி,பொதுச் செயலாளர் அருணாச்சலம் துணைத் தலைவர் முன்னிலையில் தலைமை அலுவலகத்தில் 15.4.23 மாலை நடைபெற்றது. தொழிலாளர் அணி & தொழிற்சங்கங்கள் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது.திரு. A.G. மௌரியா, துணைத்தலைவர், ம.நீ.ம

மக்கள் நீதி மய்யம் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மய்யத்தின் துணைத் தலைவர் திரு. மௌரியா அவர்கள் தலைமையிலும், பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம், மாநிலச் செயலாளர் திரு. சு.ஆ.பொன்னுசாமி ஆகியோரது முன்னிலையிலும் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணியை வலுப்படுத்துதல், நம்மவர் தொழிற்சங்க பேரவையை பலப்படுத்த புதிய தொழிற்சங்கங்கள் உருவாக்குதல், தொழிலாளர்கள், அரசுஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மத்தியில் மய்யத்தின் செயல்பாடுகளையும் தலைவர் நம்மவரின் கொள்கைகளையும் கொண்டு போய் சேர்ப்பது, 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த தொலைநோக்கு திட்டங்கள், கட்சியின் கட்டமைப்போடு தொழிலாளர் நல அணி மற்றும் தொழிற்சங்க பேரவை இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் நல அணி மண்டல அமைப்பாளர்கள் எம்.கே.ராஜன் (நெல்லை), கே.சிவக்குமார் (சேல) டி.சேகர் (சென்னை), நம்மவர் தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் வி.ரவிச்சந்திரன், பொருளாளர் திருமதி பானுமதி ஐசிஎப் தொழிற்சங்கம் தலைவர் திரு. கே.மாடசாமி, பொதுச் செயலாளர் திரு. G.S.K.வெங்கடேசன், நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தலைவர் திரு. ச.சரவணகுமார், மய்யம் மகளிர் தொழிற்சங்கம் தலைவர் திருமதி. சங்கீதா, பொதுச் செயலாளர் திருமதி. பானுமதி மற்றும் தொழிலாளர் நல அணி மாவட்ட அமைப்பாளர்கள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு சு.அ.பொன்னுசாமி