ஜனவரி 26, 2024

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஜனவரி 26, 1950 இல் குடியரசு நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.

குடியரசு தினம் ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவு கூருகிறது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளில் நாடு ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக மாறியது, அதை ஒரு குடியரசாக அறிவித்தது.

“அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞர்களின் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையின் வாகனம், அதன் ஆன்மா எப்போதும் வயதின் உணர்வு” – அண்ணல், டாக்டர் B.R.அம்பேத்கர்

குடியரசு தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்”. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

#RepublicDay2024