தமிழ்நாடு : தை 01, (ஜனவரி 15, 2024)

பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது நம் தமிழர் மரபும், பண்பாடும். தமிழர்களின் பண்டிகைகள் தை ஒன்றிலிருந்து தொடங்கும், அத்தகைய சிறப்பு வாய்ந்தது நமது தமிழர் திருநாள்.

இயற்கையை, மண் வளம், நீர் வளம், சிற்றுயிர்கள், பேருயிர்கள் என எல்லாவற்றையும் போற்றிப் பாதுகாத்து பெருமை பொங்கிட மரியாதை செய்திடும் நாளே தைத்திங்கள் தமிழர் திருநாள் பொங்கல், எத்திசையும் புகழ்மணக்க தமிழணங்கின் துணை கொண்டு இன்சொல் வாழ்த்துகளை உளம் கனிய பரிமாறிக்கொண்டு விருந்தோம்பல் செய்திடும் இந்நன்னாளில் தமிழின் சிறப்பை தமது நாவன்மையால் எடுத்துக் குழைத்து இனிக்க இனிக்க தரும் வழமையுடைய தனிப்பெரும் சிறப்புடைய ஒப்பற்ற திரைக்கலைஞரும், அரசியல் இயக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்மையான தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்து.

“இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

பாரம்பரிய தமிழர் திருவிழா இந்த பொங்கல் திருநாள். எண்ணமெல்லாம் உவகை பொங்க, உலகம் தழைக்க, இயற்கை கொடையை உபயோகித்து வியர்வை சிந்தி உழைத்து சிறக்க வைத்த உழவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக உளமார்ந்த வாழ்த்துகள்.. உழவின் பின் என்றும் நிற்கும் மய்யத்தின் தலைவர்

@ikamalhaasan அவர்களின் சார்பாக வாழ்த்தும் – மய்யத்தமிழர்கள்

#பொங்கல்திருவிழா #உழவர்திருநாள் #Pongal2024 #KamalHaasan𓃵