டிசம்பர் 06, 2024

தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மறைந்த திரு.மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டியில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டிசம்பர் 06 மாலை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்.

விழா மேடையில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கலைஞரைப் பற்றி பல நினைவுகளை மக்களிடையே பகிர்ந்தவர் தொடர்ந்து தமிழகத்தின் திரையுலகில் நடந்து வரும் படப்பிடிப்பை சரியான முறையில் நடத்தவியலாமல் தடைபடுவதும் அல்லது தாமதமடைவதும் பல அரங்குகள் செயற்கையாக அமைக்கப்படுவதில் அதிக செலவீனங்கள் ஏற்படுவதாகவும் காரண காரியங்கள் உருவாகவே அதனை எல்லாம் தவிர்க்கவும், அதிகப்படியான செலவுகளை கட்டுப்படுத்தவும் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டால் பேருதவியாக இருக்கும் என்கிறபடியாக யோசித்ததால் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்கள்.

தமிழக திரையுலகின் முடிசூடா மன்னனாகவும் தமிழக அரசியலில் முக்கிய தலைவராக விளங்கும் திரு.கமல்ஹாசன் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வரும் இது குறித்து பரிசீலித்து சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லியில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அதே மேடையில் மக்கள் முன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.