ஜனவரி : 01, 2024

புத்தகங்களை வாசிக்கும் கலைஞர்கள் மிக குறைவே அதிலும் வாசிப்பு பழக்கம் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திரைக்கலைஞராக இன்றைக்கும் மிளிர்ந்து கொண்டிருக்கும் திரை நட்சத்திரமாக நம்மவர்.

எழுத்தார்வம் கொண்ட திரைக்கலைஞராக தன்னை வரித்துக் கொண்ட நம்மவர் 1987-களில் மய்யம் எனும் பெயரிட்ட கலை மற்றும் இலக்கியம் படைப்புகள் தாங்கிய மாத இதழை துவக்கி தானே ஆசிரியராக மற்றும் பதிப்பித்தும் வெளியிட்டார்.

அதில் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பலரும் தங்களது படைப்புகளை தந்து சிறப்பித்தனர். அதையும் பல மேடைகளில் மிகவும் பெருமிதம் பொங்க சிலாகித்து “என் மேல் ப்ரியம் கொண்டு மிகச்சிறந்த ஜாம்பவான்கள் மய்யம் இதழில் அவர்களது படைப்புகளை வெளியாக பேருதவி செய்தார்கள், அவர்கள் என்னை கௌரவித்தனர் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதாக உணர்கிறேன்” என்பார். பிற்பாடு சில நெருக்கடியான நேரங்கள் தொடர்ந்ததால் மய்யம் இதழ் தொடர்ந்து வெளியாகாமல் நின்று போனது.

என்றாலும் தற்போது கவிஞர் திரு ராசி அழகப்பன் மற்றும் எழுத்தாளர் திரு.செல்வேந்திரன் ஆகியோர் முயற்சியில் நம்மவரின் மேற்பார்வையில் மய்யம் இதழில் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மீண்டும் தொகுக்கப்பட்டு யாவரும் பதிப்பகம் எனும் நிறுவனம் வெளியீடாக “மய்யம் – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” என்று தலைப்பிட்ட புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகிறது.

சர்வதேச புத்தக கண்காட்சியில் யாவரும் பப்ளிஷர்ஸ் அரங்கு எண் 598-B யில் நேரடியாகவும் அல்லது 9042461472 அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு புத்தகத்தின் விலையை செலுத்தி தபால் மற்றும் கூரியர் மூலமாகவும் உங்களின் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். (சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 03 முதல் 21 வரை நடைபெறும்