இந்தியா : ஜனவரி 15, 2024

நமது நாட்டின் நிலவழி, நீர்வழி மற்றும் ஆகாயவழி என ஒவ்வொரு எல்லையிலும் எண்ணிலடங்கா இராணுவ வீரர்களும் வீராங்கணைகளும் குளிரிலும், மழையிலும் சுளீர் வெயிலிலும் கிடையாய் கிடந்து நமது நாட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது வீர தீர செயல்களுக்கு நம்மால் மரியாதை செய்திட வேண்டும். சொந்தமும் பந்தமும் எங்கெங்கோ விட்டுவிட்டு பல மைல்கள் கடந்து கண்ணுங்கருத்துமாக நம்மை காத்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அத்தகைய இராணுவ வீரர் & வீராங்கணைகளுக்கு நன்றி சொல்லும் ஓர் நாளே இந்திய தேசிய இராணுவ தினமாகும். அவர்தம் தியாகம் போற்றுவோம் என ஓர் வாழ்த்துச் செய்தியை தந்துள்ளார் நம் மக்கள் நீதி மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #IndianArmy #ArmyDay2024