தமிழ்நாடு : ஜனவரி 21, 2024

தென்னிந்தியா இதுவரை எழுத்தாளர், கவிஞர், ஓவியர், சிற்பி, இசை வல்லுநர் என கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் பல படைப்பாளிகளை உருவாக்கித் தந்துள்ளது, அவர்களது புகழ் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது. அப்படி திக்கெட்டும் பெயர் பெற்ற மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மதிப்பிற்குரிய திரு.சுல்தான் வைக்கம் முகமது பஷீர் அவர்கள். இலக்கிய உலகில் இவர் ஓர் பிதாமகர் என இன்றும் புகழப்படுகிறார். திரு.வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

திரு.வைக்கம் முகமது பஷீர் அவர்கள் – பிறப்பு 21.01.1908 மறைவு : 05.07.1994

“ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், ‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று. நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு”.திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்