சென்னை : ஜனவரி 23, 2024

நேற்று (22.01.24) மற்றும் இன்றும் (23.01.24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்தார்போல் இரண்டு நாட்கள் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனை கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க தமிழகம் மற்றும் புதுவை மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சியை கடைநிலை மக்களிடமும் கொண்டு சேர்க்கவும், பல்வேறு அணிகளைக் கொண்டிருக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தும் நகர்வுகள் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார். அங்கு குழுமியிருந்த அனைத்து நிர்வாகிகளுடன் உரையாடி தமது கருத்துக்களைதெரிவித்ததோடு அவர்களுடைய ஆலோசனைகளையும் அக்கறையுடன் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார்.

“கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்” மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திரு.கமல்ஹாசன் அறிவுறுத்தல் “கூட்டணி அமைத்தாலும் அனைத்து பூத்களிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் இருக்க வேண்டும்” “கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்” கட்சியின் தலைவராக, தான் என்ன செய்ய வேண்டும் என நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டார் தலைவர் திரு.கமல்ஹாசன்

அதனைத் தொடர்ந்து செய்தி சேகரிக்க மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளின் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.