சென்னை : ஜனவரி 22, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரதேச செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரியின் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர், மேல்மட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவ்வமையம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ம.நீ.ம வின் தமிழக பொதுசெயலாளர், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.