ஜனவரி 25, 2024
இன்று தேசிய வாக்காளர் தினம். பதினெட்டு வயதையுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், அது கடமையும் கூட. ஜாதி மதம் வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவம் காண்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும். உலக நாடுகளில் ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டதும் இரண்டாவது நாடும் நமது இந்தியா தான். இறையான்மை காப்பது நம் இந்தியர் ஒவ்வொருவரின் கடமை.
பண்டையகாலங்களில் கூட குடவோலை முறை என்பது உண்டென்று நாம் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆங்கிலேயரின் அடக்குமுறை முடிவுக்கு வந்த பின்னர் மக்களால் மக்களை தேர்வு செய்யும் முறையே தேர்தல். அதனை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் என இரண்டு தேர்தல்களை தனி அதிகாரம் வைத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை என்பது போலவே பாராளுமன்றத்தின் தேர்தலும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து மக்களுக்காக பணியாற்ற போட்டியிடுகின்றனர். பொதுமக்களும் அவ்வாறே போட்டியிடும் வேட்பாளரின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து அவர் நிச்சயம் தொகுதிக்கு செய்து தர வேண்டிய அனைத்து தேவைகளை அவர் பதவிக்கேற்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு லஞ்சம் எதையும் பெறாமல் தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதிகளை முறையாக பயன்படுத்தி குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் மக்கள் பணிகளை தவறாமல் செய்து தர வேண்டும். எனவே பொதுமக்களாகிய நாமும் நம் பொறுப்புணர்ந்து நேர்மையாக பணியாற்றக் கூடிய ஓர் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்தல்களில் பங்கு கொண்டு தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படும் இந்திய தேசிய வாக்காளர் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நம் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி வருகிறார், ஏனெனில் இதுவரை நடைபெற்ற ஜனநாயக பொதுத்தேர்தல்களில் அவர் வாக்களிக்கத் தவறியதே இல்லை எனலாம்.
ஆகவே இந்த ஆண்டும் தேசிய வாக்களர் தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க தமது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
“இன்று தேசிய வாக்காளர் தினம். உங்கள் அரசை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுக்கும் தேர்தல் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்”. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
“Our vote is an expression of commitment to each other and the nation. Decisions are taken by those who show up. Today, on the occasion of National Voter’s Day, let us pledge to vote this year and be the spark that ignites a new revolution and a new India.” – Mr.Kamal Haasan, President – Makkal Neethi Maiam
#MyFirstVoteForDemocracy #NationalVotersDay