சென்னை : பிப்ரவரி 18, 2024
இல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் பலரது தீய எண்ணங்களை தவிடுபொடியாக்கி ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நடிகருக்கு என்ன அரசியல் தெரியுமென்பதை அடித்து நொறுக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் அரசியல் பேசியதுண்டு அவரது அழைப்பை அன்பாய் மறுத்த நம்மவர் காலப்போக்கில் அரசியலில் நுழைய வேண்டியதாயிற்று. பிற அரசியல் தலைவர்கள் போல பணம் பொருள் பதவி என எவற்றுக்கும் மயங்கிடாமல் மக்கள் பனி என ஒன்றே என கொண்ட குறிக்கோளில் சிறிதும் பிசகாமல் நாகரிக அரசியல் இன்று வரை செய்து வருகிறார். சிறிய கட்சியாக இருந்தாலும் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்வதில் இணை இங்கே எவருமில்லை. ரசிகர் மன்றமாக இருந்ததை நற்பணி இயக்கமாக மாற்றியது அதன் மூலமாக எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது என கடந்த நாற்பது வருடங்களாக இடைவிடாமல் செய்து கொண்டிருப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதே மக்கள் நீதி மய்யம் அரசியல் இயக்கம்.
வேண்டாதவர்கள் சிலரின் ஆதங்கம் எதுவும் மிஞ்சவில்லை அவர்களின் அவசியமற்ற எண்ணங்களுக்கு பதிலடியாக ஏழாம் ஆண்டில் நுழைகிறது நம் மய்யம். ஏழு ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் எழுபது ஆண்டுகள் மேலாக நீடிக்கட்டும் விரைவில் ஆட்சிக் கட்டிலில் அமரட்டும் நம் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன்.
ஏழாம் ஆண்டு துவக்க விழா முன்னேற்பாடுகள் நடந்து வருவதை தொடர்ந்து வருகின்ற 21ஆம் தேதியன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைக்க வருகை தரவுள்ளார் எனவும் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“உயிரே ! உறவே !! தமிழே !!! நம்மவர் தலைமையில். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா. 21.02.2024 காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டை தலைமை நிலையத்தில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். நம்மவர் இலட்சியம் வெல்வது நிச்சயம். அனைவரும் வாரீர்.” – மக்கள் நீதி மய்யம்
#KamalHaasan #மக்கள்நீதிமய்யம் #நாடாளுமன்றத்தில்_நம்மவர்