மே 05, 2024
காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாசர் பண்டிதர் என்று அழைக்கப்படும் இவரே முதல் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி. சித்த மருத்துவர், சமூக ஆய்வாளரும் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். சாதி எனும் தீ மனிதர்களிடையே சமத்துவத்தை எரித்து விடுவதை ஒழிக்கவே பாடுபட்டார். பெரும் கல்விப்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், இவரது தாத்தா பட்லர் கந்தப்பன் என்பவர் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறள் ஏடுகளை மீட்டு எல்லீசு துரையிடம் அளித்தார். தன்னுடைய இருபத்தைந்து வயதில் நீலகிரியில் உள்ள தோடர்களை ஒன்று திரட்டி அத்வைதானந்த சபை ஒன்றையும் நிறுவியவர் வைணவ சமய மரபுகளை பின்பற்றி வந்தது பின்னர் இவர் பௌத்த மதத்தை தழுவியதும் இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதை தமது தமிழ்ப்புலமை மூலம் விளக்கினார்.
கி.பி 1891 இல் திராவிட மகாசன சபையை தொடங்கிய அயோத்திதாசர் அவர்கள் அதற்கு முன்னதாக அதாவது ஆண்டில் திராவிட பாண்டியன் எனும் இதழைத் தொடங்கியதால் திராவிட அரசியலின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
“சமத்துவத்தைச் சீர்குலைக்கும் சாதி என்னும் அநாகரிகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் இன்று. பிற்காலத்திய திராவிடச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமாக விளங்கிய அவர்தம் சொற்களை நினைவுகொள்வோம்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்