ஜூலை 23, 2024

தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பிஜேபி ஆட்சியல்லாத மாநிலங்களுக்கு போதிய நிதிகளை ஒதுக்கித் தராமலும் அதே சமயம் தற்போதைய ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் அவர்களது கூட்டணி கட்சியில் உள்ள பீகார் மாநிலத்திற்கும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கும் நிதிகளை ஒதுக்கியுள்ளது எதிர்க்கட்சிகளின் அதிருப்தியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாகச் சொல்வதானால் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கினையும் மதரீதியாக நடத்தும் அரசியலையும் தொடர்ந்து விமரிசனம் செய்து வருகிறார். அதன் காரணமாகவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு உதவிடும் வகையில் தமது தலைமையில் உள்ள கட்சியான ம.நீ.ம சார்பாக வேட்பாளர்களை நிறுத்தாமல் கூட்டணி அமைத்து திமுக, விசிக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாராம் செய்தார். மேற்குறிப்பிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் பிரமாதமான வெற்றியை பெற்று நாற்பது பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2018 இல் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கியதும் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று மக்களின் கவனத்தை பெற்ற மய்யம் அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலிலும் பங்குபெற்று வாக்குகளை நூலிழையில் வெற்றியை சூட்சுமங்களினால் பறிகொடுத்தார் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதன்பிறகான அரசியல் நகர்வுகளில் உன்னிப்பாக பங்கெடுத்த நம்மவர் தலைவர் பாசிச பிஜேபியின் ஆட்சி மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எனினும் வட மாநிலங்களில் பல இடங்களில் ஆளும் பாஜகவே முன்னணியில் இடம்பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ச்சியாக இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்பதும் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளதும் அப்பட்டமாக தெரிகிறது. எனவே அதனை குறிப்பிட்டு தான் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் “இது தே. ஜ விற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றும் விரைவில் இன்டியாவிற்கான பட்ஜெட்டை மீண்டும் தாக்கல் செய்வார்கள் என நம்புகிறேன் என்ற நையாண்டியான கருத்து ஒன்றினை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த பல அரசியல் தலைவர்கள் மற்றும் விமரிசகர்கள் தைரியமான மற்றும் மிகச்சரியான பதிலடியை திரு.கமல்ஹாசன் அவர்கள் ஒரே வரியில் அளித்துள்ளதாக பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

Congratulations on a NDA budget, hope to have a INDIA Budget soon.”Thiru. Kamal Haasan, President, Makkal Needhi Maiam