கோவை : ஆகஸ்ட் 16, 2024
78 ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
“கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் ! கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா கோயம்புத்தூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 42-வது வார்டு வேலாண்டிபாளையத்திலும்; கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 66-வது வார்டு புலியகுளம் கருப்பராயன் வீதியிலும் ; சிங்காநல்லூர் தொகுதி தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தேசியக் கொடியேற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்டச் செயலாளர்கள் பிரபு (கோவை தெற்கு), தனவேந்திரன் (கோவை வடக்கு), மயில் கணேஷ் (சிங்காநல்லூர்), வரதராஜ் (சூலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் கோவை மண்டல அமைப்பாளர்கள் சித்திக் (நற்பணி), செவ்வேல் (ஊடகம்), கார்த்திகேயன் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) , வடக்கு தொகுதி மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, மாநகரச் செயலாளர் ராஜமனோகர், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகி ஆனந்த், பழனிசாமி, சீனிவாசன், ரஞ்சித், முருகன், பஷீர், சாந்தி, ஓம்சக்தி ரவி, ராஜேஷ், ஸ்ரீநிதி பங்கேற்றனர். தெற்கு தொகுதி மாவட்ட நிர்வாகிகள் துணைச் செயலாளர் கார்கில் கார்த்திகேயன், மாநகரச் செயலாளர்கள் சிராஜுதீன், சரவணன், மணிக்கொடி, தாஜுதீன், வார்டு செயலாளர்கள் ஆனந்தராஜ், ராஜகண்ணியப்பன், பூபதி, ரஞ்சித், ஜலீல், ஆனந்த், சாந்தி, உமா, சங்கீதா, கிளைச் செயலாளர்கள் சுரேன், மாரிமுத்து, விவின், ராஜ்குமார், மதி, முஸ்தபா, பாபு, நாகேந்திரன், முருகன், த்ரிஷா, பால்ராஜ், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, ஹரி, வாசுதேவன், ESI ரவி, அற்புதராஜ், பிரகாஷ் கலந்து கொண்டனர். சிங்காநல்லூர் தொகுதி மாவட்ட நிர்வாகிகள் துணைச் செயலாளர் செந்தில்குமார், நற்பணி மன்ற மாவட்ட அமைப்பாளர் ஜெயசுதன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ரகுபதி, மாநகரச் செயலாளர்கள் ரகுபதி, சௌந்தரராஜ், தன்ராஜ், நற்பணி மன்ற மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய்கணேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் மணிமொழி, ராதாகிருஷ்ணன், சண்முகம், மகளிரணி சுலோச்சனா, கிளைச் செயலாளர்கள் அசோக், ஸ்டாலின், சூலூர் தொகுதி மாவட்டப் பொருளாளர் சுகுமார் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.” – மக்கள் நீதி மய்யம்
நன்றி : ம.நீ.ம – சமூக வலைதளம்