திருவள்ளூர் – அக்டோபர் 12, 2024

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை எனும் ரயில்நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தார்பாங்கா விரைவு ரயில் மோதியதில் பயங்கர விபத்து நடந்துள்ளது. ஆயினும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது பெரும் ஆறுதல். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர். அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

டிஜிட்டல் இந்தியா, Make in India, அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆண்டுதோறும் பயங்கர ரயில்விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்கள் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யாதா ? தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வந்தால் மக்கள் தங்கள் ரயில் பயணத்தை அச்சத்துடன் தான் தொடர வேண்டுமா ? தொழில்நுட்ப கோளாறு எப்போதாவது நிகழக் கூடும் ஆனால் தொடர்ச்சியாக ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் எதனால் ஏற்படுகிறது. அப்படியானால் தொழில்நுட்பம் சரிவர செயல்படவில்லை என்று தானே பொருள்.

கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை 24 ரயில் விபத்துகள் நடந்துள்ளது அதில் பெரும்பான்மையான உயிரிழப்புகள் நடந்துள்ளன. குறிப்பாக சொல்ல்வதென்றால் நடப்பாண்டில் ஜூலை – ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ரயில் ஓடும்போது தடம்புரள்வது ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது. ரயில்வே துறையில் பயணிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு ? இது போன்ற விபத்துகள் மனித தவறுகளால் நடக்கிறதா அல்லது தொழில்நுட்பம்தான் காரணமா ? இப்படி பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன. ஆனால் வழக்கம் போல் ஆளும் ஒன்றிய அரசு இதற்குரிய ஒப்புக்கொள்ளக்கூடிய பதிலாக இனிவரும் காலங்களில் இது போல் நிகழாமல் இருக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்பங்களையும் பலமுறை ஆய்வு செய்து விபத்தில்லா ரயில் பயணத்தை உறுதி செய்திட வேண்டும்.

ஏனெனில், பொதுமக்களின் உயிர்கள் கறிவேப்பிலை கொத்துக்கள் அல்ல ?

நன்றி : ம.நீ.ம & சமூக ஊடக இணையதளங்கள்