ஆகஸ்ட் 24, 2023

சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்ட நிகழ்வினை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய போது வழியில் ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் திரு சங்கர் பலியான சம்பவம் குறித்து தான் பெரும் வேதனை உற்றதாக தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

திருவனந்தபுரத்தில் சந்திரயான் தொடர்பான செய்தி சேகரித்துவிட்டு திரும்புகையில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சங்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர் நாராயணமூர்த்தி, நியூஸ்-7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் ஆகியோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்