டிசம்பர் 24, 2024

ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

“ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம். மக்கள் நீதி மய்யம் ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பாக, சூரம்பட்டி பகுதியில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. நந்தகோபால் அவர்களின் ஏற்பாட்டில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் மாவட்டச் செயலாளர் திரு. முரளி கிருஷ்ணன், ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாவட்ட அமைப்பாளர் திருமதி.ரீனா டேவிட், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. தட்சிணாமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திரு. கார்த்திக், நகரச் செயலாளர்கள் திரு.டேவிட், திரு. விமல், திரு. மணிகண்டன், திரு. குணா, வட்டச் செயலாளர்கள் திரு. வரதராஜன், திரு. சந்துரு, திரு. சித்திரமணி, திரு.சேகர், நிர்வாகிகள் திரு. ஆறுமுகம், திரு. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்