டிசம்பர் 18, 2024
நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் நேரடி பார்வையில் இயங்கிவரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் கடல்கடந்தும் இயங்கி வருகிறது. நம்மவர் தலைவரின் பிறந்த நாளான நவம்பர் 7 இல் தொடங்கி பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நற்பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகள் வழியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மலேசியாவில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மலேசியா கிளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாமில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று இரத்தம் தானம் அளித்தனர்.
கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினர் சார்பாக மலேசியாவில் ரத்த தான முகாம். மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மலேசியாவில் நடைபெற்ற ரத்த தான முகாமில் டாக்டர் கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நற்பணி இயக்கப் பொறுப்பாளர் திரு. பிரகாஷ், துணைப் பொறுப்பாளர்கள் திரு. பாலன்ராஜ், திருமதி. ஹேமாவதி, பொருளாளர் திரு. லோகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. மரியம்மா, திரு. தியாகு, திரு. ஹரிந்திரன், திரு. தியாகராஜன், திரு. மஹேன், திருமதி. சாமளா ஆகியோர் செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம்
#KamalHaasan #KHWA #BloodDonation #MalaysiaKHWA
நன்றி : மக்கள் நீதி மய்யம்