கோவை ஜனவரி 09, 2020

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த செல்வி யாழினி ஸ்ரீ எனும் யோகேஸ்வரி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக முதல் தவணையாக ரூபாய் 30,000/- (ரூபாய் முப்பது ஆயிரம்) வங்கி வரைவோலை தனை மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்கம் கன்னிமாரா குழுமத்தின் சார்பாக இங்கிலாந்து (United Kingdom) பொறுப்பாளர் திரு கண்ணன் சுவாமி அவர்களின் முன்னெடுப்பில் நமது துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்களின் தலைமையில் அன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகள் திரு சக்தி எனும் சத்யா, திரு தம்பா, திரு & திருமதி கீதாலட்சுமி, திரு சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வுக்கு ஆதாராமாக இருந்து ஆதரவளித்தவர் மருத்துவர் திருமதி பரிமளா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது கன்னிமாரா குழு.